Home சமையல் குறிப்புகள் தக்காளி சூப்

தக்காளி சூப்

24

தக்காளி சூப் தேவையானபொருட்கள்

தக்காளி – 2
துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி – 1/4 டீஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிது
பட்டை – சிறிது
சோம்பு – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையானஅளவு

தக்காளி சூப் செய்முறை

துவரம்பருப்பை மஞ்சள்பொடி போட்டு வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம்,பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, சோம்பு, மிளகு போட்டு தாளித்து பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,தக்காளி போட்டு நன்றாக வதக்கி வேக வைத்து மசித்து வைத்துள்ள துவரம்பருப்பைச் சேர்க்கவும். பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு சத்தம் வரும் வரை வைக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து சிறிது கொதிக்க விட்டு கொத்தமல்லி து£வி இறக்கவும்.