Home உறவு-காதல் டேட்டிங்கிற்கு பத்து பேர்வரை வேணுமாம்!

டேட்டிங்கிற்கு பத்து பேர்வரை வேணுமாம்!

19

ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி இன்றைக்கு யாரும் யாரையும் காதலிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இன்றைக்கு விலிவ், டேட்டிங் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் காதலிக்க எண்ணிக்கை அவசியமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று.

எத்தனை காதலர்கள் இருந்தால் சரிப்பட்டு வரும் என்று இளம் தலைமுறையினரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு குறைந்த பட்சம் பத்து பேராவது காதலிக்க அவசியம் பதிலளித்துள்ளனர்.

www.SeekingArrangement.com என்ற டேட்டிங் சைட் ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டது. ஆய்வில் 1000 பேர் வரை இளம் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களிடம் காதல் குறித்தும் காதலிக்கவும், டேட்டிங் செல்லவும் எத்தனை பேர்வரை தேவை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையிலும் இருந்தன.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 46 சதவிகிதம் வரை 10 பேர்வரை காதலிக்க ஏற்றது என்று கூறியுள்ளனர். மேலும் 36 சதவிகித பெண்களும்.42 சதவிகித பெண்களும் டேட்டிங்கிற்கும் அனுபவத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும் குறைந்த பட்சம் 10 காதலர்களாகவது வேண்டும் என்று கூறியுள்ளனர்.

11 சதவிகித பெண்களும், 10 சதவிகித ஆண்களும் 10 முதல் 30 வரை காதலிக்கவும் டேட்டிங்கிற்கும் வேண்டும் என்று கூறியுள்ளனர். 3 சதவிகிதம் பேர் குறைந்த பட்சம் 30க்கும் மேற்பட்டவர்கள் வரை காதலிக்கவும், டேட்டிங்கிற்கும் தேவை என்று கூறியுள்ளனர்.இதில் 35 சதவிகிதம் பெண்கள் ஆண்களைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு அவர்களை காதலிக்க தேர்ந்தெடுப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால் ஆண்களுக்கு பெண்களின் செக்ஸ்சுவல் ஹிஸ்டரி பற்றி தெரிந்து கொண்டு பின்னர் பெண்களை அணுகுவதாக கூறியுள்ளனர். பெண்களைப் பற்றி ஆண்களும், ஆண்களைப் பற்றி பெண்களும் சரியாக புரிந்து கொள்ள பத்துபேர் வரை கண்டிப்பாக வேண்டும் என்று அந்த கணக்கெடுப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதெல்லாம் என்ன சாதாரணம் மிக பிரபலமான நட்சத்திரங்களான மிக் ஜாக்கர் 4000 பேர்வரையுடனும், டோனி ப்ளாக்பர்ன் 500 பேரிடனும் வாரன் பீட்டி 12ஆயிரத்து 775 பேருடனுடம் செக்ஸ் வைத்துக்கொண்டிருந்தனராம். ருசல் ப்ராண்டுக்கு நாளைக்கு மூன்று பெண்கள் வரை படுக்கையை அலங்கரிக்க வேண்டும் என்று அதிர்ச்சித்தகவலை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.அதேபோல் சில பெண்களும் ஏராளமான ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டிருந்ததை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளனர்.

சுவாரஸ்யத்திற்காகவும், செக்ஸ் மீதான ஆர்வத்தினாலேயும்தான் அடிக்கடி பார்ட்னர்களை மாற்றுவது நடக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் மலையேறிவிட்டது. நல்ல ஆண்மகன் யாரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்ணிடம் இதற்கு முன் எத்தனை பேருடன் உறவில் ஈடுபட்டிருக்கிறாய் என்பதை கேட்க மாட்டான் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்வே வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. நம்ம ஊர் இளசுகள் என்ன சொல்லுவார்களோ தெரியலையே!