Home அந்தரங்கம் ச்சீ! சீ! இரவில் ப் ரா அணிந்து தூங்குவதால் இவ்வளவு சிக்கல் இருக்கா? முகம் சுளிக்காமல்...

ச்சீ! சீ! இரவில் ப் ரா அணிந்து தூங்குவதால் இவ்வளவு சிக்கல் இருக்கா? முகம் சுளிக்காமல் உள்ள வாங்க! உருப்படியா இதாவது செய்வோம்!

415

இணைக்கு நைட்டி வந்த பிறகு, இந்த கேள்வியே தேவையில்லை என்றாலும், இரவில் தூங்கும் போது, பிரா அணிந்து கொண்டு, அதற்கு மேல் நைட்டி அணியும் பழக்கம் சிலருக்கு இருக்கு. முதலில் பிரா எதற்கு அணிகிறோம் என்ற நோக்கம் தெரியாமலேயே, எல்லா நேரங்களிலும் அணிவது தான் தவறு. பெரிய மார்பகம் இருக்கும் பெண்களுக்கு, பிரா அணியாமல் விட்டால் கொஞ்சம் சங்கடமான உணர்வு இருக்கும் தான், இருந்தாலும் தூங்கும் போது மட்டும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெளிப்படையாக கூறினால், இன்னும் 80 சதவிகித பெண்களுக்கு, அவர்களின் மார்பக அளவுக்கு ஏற்ப பிரா அணியத்தெரிவதில்லை. மார்பு அளவுக்கு பொறுத்தமற்ற பிராவை அணிவதில் இருந்து சிக்கல் தொடங்குது. 70 சதவிகித பெண்கள், மிக இறுக்கமான பிரா அணிவதையே விரும்புகின்றனராம். வெளியில் செல்லும் போது, உடல் நேர்த்தியாக காட்ட எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் போதும் அதனை பழக்கப்படுத்திக்கொண்டால், என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

இரவில் இறுக்கமாக பிரா அணிந்தால், மார்பு பகுதியில் உள்ள சதைகள் இறுகி, அங்கு இரத்தஓட்டம் பாய்வது குறைகிறது. சில நேரங்களில், சரியான அளவில் பிரா அணியவில்லை என்றால், தொடர்ச்சியாக எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். தூங்கும் போது அசௌகரியமான உணர்வு ஏற்படும். ஒரு வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள். பிரா அணிந்து கொண்டு தூங்கும் போது, ஆழ்ந்த நிலை தூக்கத்திற்கு செல்வதை ஏதோ ஒரு உணர்வு தடுப்பது போன்று இருக்கும்.

ஹைப்பர் பி க்மென்டேஷன் என்று சொல்லப்படும் தோல் பாதிப்பு உண்டாகும். பிரா ஸ்டரைப் அச்சு எங்கெல்லாம் படிகிறதோ, அந்த இடம் கருப்பாக மாற ஆரம்பிக்கும். அந்த மாதிரியான பிராக்களை, இரவிலும் தொடர்ச்சியாக பிரா அணிய ஆரம்பித்தால், முதலில் கருமை நிறமாகி, அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். அதனையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், மார்பக பூஞ்சை உண்டாகும். தூங்குவது என்பதே, உடலை இலகுவாக்கி, உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கொடுக்கத்தான். அந்த நேரத்தில் தேவையில்லாத இறுக்கங்களை முடிந்த அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம். நிம்மதியான தூக்கம் வரும்.