Home சமையல் குறிப்புகள் சேமியா இறால் பிரியாணி!

சேமியா இறால் பிரியாணி!

12

தேவையான பொருட்கள்
சேமியா – 2 கப்
இறால் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி-1
பூண்டு பேஸ்ட் -2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மஞ்சள் தூலள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி புதினா தேவையான அளவு
பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை – 1
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
எலுமிச்சம்பழம் – 1
செய்முறை
இறாலை கரம் மசாலா பவுடர் ,உப்பு, மஞ்சள் தூல், மிளகாய் தூல், தயிர் சேர்த்து பிசைந்து வைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை 75% அவிக்கவும்.
இன்னுமொரு பத்திரத்தில் எண்ணெயும் , நெய்யும் இட்டு சூடாக்கி அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கராம்பு பட்டை, வெங்காயம் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கிகொள்ளவும். அதனுடன் நறுக்கப்பட்ட தக்காளி, புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பின் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, அவியும் வரை வேக விடவும். பின் சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும். நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும். சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.