Home சமையல் குறிப்புகள் செட்டிநாடு சிக்கன் சாப்ஸ்

செட்டிநாடு சிக்கன் சாப்ஸ்

12

சுவையான செட்டிநாடு சிக்கன் சாப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையானவை

சிக்கன் – 1/2 கிலோ
எண்ணெய் – 1.5 டீஸ்பூன்
வெங்காயம் – 3
இஞ்சி – 1.5 டீஸ்பூன் ( நறுக்கவும்)
பூண்டு – 1.5 டீஸ்பூன் ( நறுக்கவும்)
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1
தக்காளி சாறு – 2
உப்பு – சுவைக்கேற்ப

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் – 5
கொத்தமல்லி விதை – 2 டீஸ்பூன்
சீரகம் – 1.5 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகுமாறு வதக்கவும்.

அதனுடன், சிக்கன், மஞ்சள்தூள், அரைத்த மசாலா தூள், சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.

அடுத்து, தக்காளி சாறு ஊற்றி 2 நிமிடங்கள் வேக வைக்கவும்.

1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

சிக்கன் கிரேவி போல் வேண்டுமென்றால் 5 நிமிடங்கள் தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

டேஸ்டியான சிக்கன் சாப்ஸ் ரெடி!