Home சூடான செய்திகள் செக்ஸ்-7 டூ 13 நிமிடமே பெஸ்ட்! ஓர் ஆய்வு

செக்ஸ்-7 டூ 13 நிமிடமே பெஸ்ட்! ஓர் ஆய்வு

42

images (1)வாஷிங்டன்: 7 முதல் 13 நிமிடங்கள் வரை நீடிக்கும் உடலுறவுதான் சிறந்தது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிக அளவில் நடத்தப்படும் சர்வேக்குரிய தலைப்பு செக்ஸ்தான். பரபரப்பில்லாத சமயங்களில் பல முக்கிய இதழ்கள், செக்ஸ் குறித் சர்வேக்களை நடத்தி பரபரப்பைக் கிளப்பி விடுவது கண்கூடு.

செக்ஸ் குறித்து உலக அளவில் ஏகப்பட்ட சர்வேக்கள், கருத்துக் கணிப்புகள், அலசல்கள், ஆய்வுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதாவது எது சிறந்த உடலுறவு என்பதுதான் அந்த சர்வேயின் சப்ஜெக்ட்.

டாக்டர் எரிக் கார்டி என்பவர் தலைமையில் பென்சில்வேனியாவின், ஈரி நகரில் உள்ள பெஹ்ரன்ட் கல்லூரியைச் சேர்ந்த குழு இந்த ஆய்வை நடத்தியது. அமெரிக்கர்கள் மற்றும் கனடா நாட்டினரிடையே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் படு சுவாரஸ்யமாக உள்ளன.

உடலுறவுக்கு 3 நிமிடங்களே போதுமானது என இந்த சர்வே தெரிவிக்கிறது. இருப்பினும் முழு திருப்தி ஏற்படுவது 7 நிமிடங்கள் முதல் 13 நிமிடங்கள் வரைதானாம். அந்த கால அளவுக்கு நீடிக்கும் உடலுறவுதான் மிகச் சிறந்த செக்ஸ் உறவு என சர்வேயில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனராம்.

அதே சமயம், 3 நிமிடத்திற்கு குறைவான உறவும், 13 நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உறவும் சரிவர திருப்தி தருவதில்லையாம்.

இந்த ஆய்வு குறித்து கார்டி கூறுகையில், ஆய்வின் முக்கிய நோக்கமே, நீண்ட நேர உறவுதான் சிறந்தது, திருப்தி தருவது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் தவறான எண்ணத்தை உடைப்பதுதான். இந்தக் கருத்துக் கணிப்பிலும் அதுதான் தெரிய வந்துள்ளது.

ஏமாற்றமற்ற, திருப்திகரமான உறவுக்கு குறைந்தது 7 நிமிடங்களும், அதிகபட்சம் 13 நிமிடங்களும் போதுமானது என்பதைதான் இந்த கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

ஆணுறுப்பு பெரிதாக இருந்தாலோ அல்லது இரவு நேரம் முழுவதும் உறவு கொண்டாலோதான் உறவு சிறப்பாக இருக்கும், திருப்தி கிடைக்கும் என்பது தவறான கருத்து. அதை இந்த கருத்துக் கணிப்பு நிரூபித்துள்ளது.

பெரும்பாலான தம்பதிகள், காதலர்கள் இப்படிப்பட்ட பல தவறான கருத்துக்களுடன்தான் உறவில் ஈடுபடுகின்றனர். இதனால் பல நேரங்களில் பல்வேறு பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் ஏற்படுகின்றன என்கிறார் கார்டி.

இந்த ஆய்வுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செக்ஸ் மருத்துவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ஆஸ்திரேலிய ஆண்களில் பெரும்பாலானவர்கள் நீண்ட நேர உறவையே விரும்புகின்றனர். பெரும்பாலான பெண்கள், இதுதொடர்பாக பெரிய அளவில் கவலைப்படுவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

பிரிஸ்பேனைச் சேர்ந்த செக்ஸ் மருத்துவர் டாக்டர் ஜேன் ஹோவர்ட் கூறுகையில், ஆஸ்திரேலியப் பெண்கள் 3 முதல் 7 நிமிடங்கள் வரை நீடிக்கும் உறவையே விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு மேலும் நீடிப்பதையே ஆண்கள் விரும்புகின்றனர். அப்படி நீடித்தால் பெண்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை என்கிறார்.