Home பாலியல் செக்ஸில் ஆர்வமில்லையா?

செக்ஸில் ஆர்வமில்லையா?

43

கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.

தீர்வு

உடனடியாக மருத்துவரை சந்தித்து தைராய்டு சோதனை மேற்கொள்ளுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதற்கும் சிகிச்சை அவசியம். சரியாக சாப்பிடுவது, இரத்தத் தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மிதமான உடற்பயிற்சி போன்றவையெல்லாம் உங்கள் மூடை மாற்றும். பிறகென்ன நேத்து ராத்திரியம்மாதான் தினம் தினம்.

பொதுவாக தாம்பத்ய உறவில் ஈடுபடு்வதற்கு முன்பு குறைந்தது அரை மணி நேரமாவது கணவன்-மனைவி முன் தூண்டல் நடைபெற வேண்டும். உச்சி முதல் பாதம் வரை மனைவியை வருடி உணர்வினைத் தூண்ட வேண்டும். இப்படிச் செய்வதனால் பெண் உறுப்பில் உலர்தல் பிரச்சனையிருக்காது.

சில சமயங்களில் ஹார்மோன் குறைபாடு காரணமாகவும் உலர்தல் பிரச்சனை இருக்கலாம். ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தாலும் இந்தப் பிரச்சனை வரலாம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ரிப்பிளேஸ்மென்ட் தெரபி சிகிச்சை அளிக்க வேண்டும்.

இது தவிர செக்ஸ் என்பது ஒரு தவறான காரியம் என்றோ அல்லது அது தெய்வத்துக்கு எதிரான செயல் என்ற எண்ணமோ கொண்டிருந்தால் அந்த மாதிரிப் பெண்களால் செக்சில் ஒரு மனதாக லயிக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்கு முன்தூண்டல் கூட கிளர்ச்சியைத் தந்து தாம்பத்ய உறவில் நிறைவு அளிக்காது. அது மட்டுமின்றி இளம் வயதிலேயே பலவந்தமாக பாலுறவில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கு, பாலுறவு என்றாலே வெறுப்புத் தான் வரும்.

தாம்பத்ய உறவில் ஒரு பெண் தனது கணவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது என்பது அவளது சந்தோஷமான, கவலையற்ற மனநிலையைப் பொறுத்தது. இதில் அறுபது சதவீத பெண்கள் ஏதோ ஒரு மனவிரக்தியுடன் கணவனின் ஆசையை தீர்த்துக் கொள்ளவே தன்னை தயார்படுத்திக் கொண்டு ஒத்துழைக்கிறார்கள். அந்தி மாலைப் பொழுதில் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடி தன்னுடைய பார்ட்னரை மகிழ்வித்து அதன் பின் கூடி மகிழும். பெண் மயிலும் சந்தோஷ துள்ளலுடன் தோகையழகை ரசித்த போதையுடன் ஆண் மயிலின் தாகத்தை தணிக்கும். அதுப்போல தான் பெண்மையும். தன் மனத்தோடு ஒத்து போகும் கணவனுடன் தன்னை பகிர்ந்து கொள்வதில் அதிகமான ஈடுபாடு காட்டுவாள். பெண்மையை மகிழ்வித்து தானும் சந்தோஷ கடலில் மிதக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களோ மிகக் குறைவு. பெண் மனசு ஆழமுன்னு சொல்வாங்க. வெட்கம், நாணம் என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் பெண்மையின் அச்சத்தைப் போக்க வேண்டியது ஆண்மையின் கடமை. வெறுமனே மனைவியை தன் இஷ்டப்படி மனநிலை, உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் செக்ஸ் உறவுக்கு அழைப்பது ஆணுக்கு கிக்காக இருக்கலாம். ஆனால் மனைவியோ வெறுப்பின் உச்சத்திற்கே போய் விடுவாள். ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நேர்ந்து விடும்.

மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் செக்ஸ். ஆனால் ஒரு சிலருக்கு அதில் ஆர்வமே இல்லாமல் போகலாம். இன்னும் சிலருக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். சிறு வயதிலோ, கடந்த காலத்திலோ தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை வைத்து செக்ஸ் உறவையே வெறுக்கும் பெண்களும் பலர். செக்ஸை வெறுப்பதும், ஒதுக்குவதும் உடல், மன ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிறார்கள்.

மருத்துவர்கள். செக்ஸ் வைத்துக் கொள்வதால் என் னென்ன நன்மைகள் ஏற்படுகின்றனவாம் தெரியுமா?

செக்ஸ் உறவில் ஈடுபடும்போது அது தொடர்பான உடல் உறுப்புகள் மட்டுமே இயங்குவதில்லை. உடலின் பல்வேறு பாகங்களும் இயங்குகின்றன. ஆரோக்கியமான செக்ஸ் உறவு, பிரகாசமான கண்களுக்கும், பளபளப்பான கூந்தலுக்கும், முகத்தில் பொலிவு மிளிரவும் வழி செய்கிறதாம்.

மாதவிலக்கு தொடர்பான கோளாறுகள் இருப்பவர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் முறையான, ஆரோக்கியமான செக்ஸ் உறவு
மாதவிலக்குக் கோளாறுகளைக்கூட சரி செய்கிறதாம்.

இருதயத்தின் செயல்பாடுகளை சீராக்கவும், தசைகளை சரியாக இயங்கச் செய்யவும்,

முடக்கு வாதம், எலும்பு தொடர்பான பிரச்சினைகள் போன்றவை தாக்காமலிருக்கவும் செக்ஸ் உறவு உதவுகிறதாம்.

எதற்கெடுத்தாலும் கோபப்படுபவரா நீங்கள்? சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட டென்ஷன் ஆகிறீர்களா? அப்படியானால் உங்கள் தாம்பத்திய உறவில் ஏதோ கோளாறு இருப்பதாக அர்த்தம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆரோக்கியமான செக்ஸ் உறவின்போது மூளையில் சுரக்கப்படும் எண்டார்ஃபின்கள், படபடப்பை, கோபத்தை,
டென்ஷனைக் கட்டுப்படுத்த உதவுகிறதாம்.

மிதமான, ஆரோக்கியமான செக்ஸ் உறவை அனுபவிப்பவர்களுக்கு சமுதாயத்தில் மற்றவர்களுடன் கலந்து பழகுவதில் கூச்ச உணர்வு இருப்பதில்லையாம். சகஜமாகப் பழக முடிகிறதாம்.

தம்பதியருக்கிடையேயான ஆரோக்கியமான செக்ஸ் உறவு, அவர்கள் எடுத்ததற்கெல்லாம் மருந்து, மாத்திரைகளின் உதவியை நாடுவதைத் தவிர்க்கச் செய்கிறதாம்.

வயதாவதைப் பொருட்படுத்தாமல், எப்போதும்போல தாம்பத்திய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மன உளைச்சல்கள், அனாவசிய பயம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்படுவ தில்லையாம். சதூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு செக்ஸ் அற்புத மருந்தாகப் பலனளிக்கிறதாம். மிதமான செக்ஸ் உறவுக்குப் பிறகு அமைதியான, தொந்தரவில்லாத, இனிய உறக்கம் நிச்சயம் என்கிறது செக்ஸ் மருத்துவம்.

செக்ஸ் உறவின்போதான உடல் இயக்கத்தின் காரணமாக பெருமளவிலான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அது உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள உதவுகிறதாம்.

மூச்சு விடுவதில் சிரமம், தசைப் பிடிப்பு, முறையற்ற இரத்த அழுத்தம் போன்றவற்றை ஆரோக்கியமான செக்ஸ் உறவு குணப்படுத்துகிறதாம். தாம்பத்திய உறவின் போதான வியர்வை வெளிப்பாடு, சருமத்திலுள்ள அதிகப்படியான உப்பும், நச்சுப் பொருட்களும் வெளியேற உதவுகிறதாம்.

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கும் செக்ஸ் உறவு பலனளிக்கிறதாம்.