Home பெண்கள் அழகு குறிப்பு சிவப்பு நிற பழங்கள் சருமத்தைக் காக்கும்!

சிவப்பு நிற பழங்கள் சருமத்தைக் காக்கும்!

11

பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சருமத்தை பொலிவாக்குவதில் இந்த சிவப்பு நிற பழங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்பூசனி ஆகியவை உடல் நலத்திற்கும், சரும அழகிற்கும் மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. தங்கம் போல் ஜொலிக்கும் எப்படிப்பட்ட பெண்ணின் முகத்தையும் தங்கம் போல ஜொலிக்க வைக்க வேண்டும் என்றால் பல்வேறு பொருட்களுடன் தக்காளியை பயன்படுத்தினால் போதும். கோடை காலத்தில் வெளியில் சென்று வந்தாலே முகம் பொலிவிழந்து விடும். நீண்ட நாட்களாக கவனிக்காமல் விடுவதாலும் இறந்த செல்கள் அதிகம் தேங்கி முகம் கருமையாகிவிடும். இதனை போக்க ஒரு தக்காளி கூழ் போல ஆக்கி அதில் கால் டீ ஸ்பூன் ரவையை கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்து நீரில் நன்றாக தேய்த்து கழுவினால் முகம் பிரகாசமடையும். மென்மையான முகம் ஒரு சிலரது முகம் மென்மையாக இல்லாது முரட்டுத்தனமாக காணப்படும். இவர்கள் ஒரு தக்காளியை அரைத்து கூழாக்கி அதனுடன் அரை டீ ஸ்பூன் தயிரை கலந்து அதனை முகத்தில் பேக் போடவேண்டும். 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பொலிவடைவதோடு மிருதுவாகும். தினசரி வெறும் தக்காளி சாறு மட்டும் தடவி வந்தால் சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். வெள்ளரித் துண்டு, தக்காளி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து கண்களைச் சுற்றி பூசி சிறிது நேரம் ஊறவைத்து கழுவ கருவளையம் போகும். சரும பளபளப்புக்கு கோடை காலத்தில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிவப்பு நிற காய்கறிகள், பழங்கள் போன்றவைகளில் உள்ள அமிலங்கள் சூரிய ஒளியின் தாக்குதலில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்ற சிவப்பு நிறப் பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம் காணப்படுகின்றன. இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சருமத்தை பாதுகாக்கிறது சருமம் பளபளப்படைய செய்கிறது. ப்ளு பெரீஸ், ஸ்ட்ரா பெரீஸ், மாதுளை போன்ற பழங்கள் சூரிய ஒளியின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றன.