Home சமையல் குறிப்புகள் சில்லி சிக்கன்

சில்லி சிக்கன்

21

சில்லி சிக்கன் தேவையான பொருட்கள்

பொரிக்க

சிக்கன் – 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
கார்ன்ப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
முட்டை – 1
தயிர் – 2 டீஸ்பூன்
வினிகர் – 1/2 டேபிள் ஸ்பூன்
ரெட்பவுடர் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வதக்க

பச்சை மிளகாய் – 3
குடமிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 10 பல்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
ரெட் சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

சில்லி சிக்கன் செய்முறை

பொரிக்க கொடுத்துள்ள பொருள்கள் அனைத்தையும் ஒரு கலவையாக கலக்கி, அதில் சிக்கனைப் போட்டு பிசறி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். பச்சை மிளகாயை வட்டமாக நறுக்கவும். குடமிளகாய், வெங்காயத்தை சதுரங்களாக நறுக்கவும். பூண்டை சிறியதாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், சதுரங்களாக நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கி தேவையான உப்பு போட்டு சாஸ்களையும் ஊற்றி வதக்கி, பொரித்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு சிறிது நேரம் கிளறி ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும். – See more at: http://www.tamilnews.cc/news.php?id=63609#sthash.RsPBvTnf.dpuf