Home ஆரோக்கியம் பொது மருத்துவம் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறதா?… முள்ளங்கியை இப்படி செய்து சாப்பிடுங்க சரியாகிடும்..

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறதா?… முள்ளங்கியை இப்படி செய்து சாப்பிடுங்க சரியாகிடும்..

29

நீண்ட நேரப்பயணம், கடுமையான அலைச்சல், கண் விழிப்பு, உடலில் அதிகச் சூடு இவற்றால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும். அடிவயிற்றில், சிறுநீர்ப் பாதையில் கடுத்துக் கொண்டேயிருக்கும்.

அவ்வாறு, இருக்கும்போது வெள்ளை முள்ளங்கியை நன்றாக அலசி, சிறுசிறு துண்டுகளாக்கி, வெல்லத்தோடு அத்துண்டுகளையும் சேர்த்து பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். சுவையாகவும் இருக்கும்.

சிறிதாக இருந்தால் ஒரு முள்ளங்கி, பெரியதாக இருந்தால் அரை முள்ளங்கி சாப்பிட்டால் போதும். காலை, மாலை இருவேளை சாப்பிட்டால், சாப்பிட்ட ½ மணி நேரத்தில் கடுப்பு அகலும். மற்றபடி ஆங்கில மருந்துகளைச் சாப்பிட்டு பக்கவிளைவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

வெள்ளரிப் பிஞ்சு கிடைத்தால் மதிய நேரத்தில் வெள்ளரிப் பிஞ்சை மோரில் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவது சிறு நீர்ப்பாதையை நோய்த்தொற்றுக்கள் இல்லாமல் வைத்திருக்கும். சிறுநீரகக் கோளாறு உண்டாகாமல் தடுக்கும்.

வாரம் இருமுறை வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரகக் கல் நீங்கும். கொழுப்பு குறையும்.