Home பெண்கள் தாய்மை நலம் சிசேரியன் செய்த மனைவியுடன் உடனே உடலுறவு வைக்கலாமா?

சிசேரியன் செய்த மனைவியுடன் உடனே உடலுறவு வைக்கலாமா?

37

கடந்த மாதம் என் மனைவிக்கு சிசேரியன் முறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாகக் கருத்தடை ஆபரேஷனும் செய்து விட்டோம். தையல்களையும் பிரித்தாகி விட்டது.

என் மனைவியின் பிறப்புறுப்பில் மட்டும் லேசான ரத்தப்போக்கு இருக்கிறது. மற்றபடி எந்தப் பிரச்னையுமின்றி நலமாகவே இருக்கிறாள். நாங்கள் உடலுறவு கொண்டு பல மாதங்களாகி விட்டன.

உறவில் ஈடுபட நான் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தும் என் மனைவி வேண்டாமென மறுக்கிறாள். நாங்கள் உறவு கொண்டால் அவளது உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
சிசேரியனுக்குப் பிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவில் ஈடுபடலாம்?

சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது அடிவயிற்றின் சதைகள் பிரித்து மறுபடியும் தைக்கப்படுகின்றன.

இந்த தையல்கள் கூடி தசைகள் மூட மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்பதால், வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மூன்று மாத பாலியல் ஓய்வு தேவைப்படுகிறது.

இந்த கால அவகாசத்துக்குப் பிறகு படிப்படியாக அவர்கள் நடைமுறை வாழ்வுக்கு திரும்பலாம் – பாலியல் ஈடுபாடு உட்பட.