Home ஜல்சா சவுதியில் கணவர் கையில் தூரிகை – யாழில் கள்ளப்புருசனுடன் காரிகை

சவுதியில் கணவர் கையில் தூரிகை – யாழில் கள்ளப்புருசனுடன் காரிகை

28

‘லூசு கொஞ்சம் வெயிற் பண்ணுடா… இப்பத்தான் போம் நிரப்பிக் கொடுத்துட்டு இருக்கிறன். கொஞ்ச நேரம் செல்லும்’ யாழில் உள்ள பிரபல வங்கிக்கு காசு எடுக்கப் போனபோது ஒரு பொம்பிளை தனது கைத் தொலைபேசியில் இப்படி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

பார்த்தால் 35 வயது இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. ஒரு வேளை விதவையா இருக்கும் என்டு நினைத்துக் கொண்டு இருக்கும் போது தனது ‘பேர்ஸ்’ இல் இருந்து இன்னொரு கைத் தொலைபேசியை எடுத்தபோது அந்தப் பொம்பிளையின் நடவடிக்கையால் எனக்கு கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டது. ‘பேர்ஸ்சில்’ .இருந்து எடுக்கும் போதே அந்த தொலைபேசியும் அனுங்கிக் கொண்டு இருந்தது.

தொலைபேசியை ஒன் செய்து ‘ஓமப்பா..வந்துட்டுது. 25 ஆயிரம் ரூபாதான் வந்தது. ஏன் கூட அனுப்பேலாதோ… அவளை ஸ்கூல்ல சேர்க்கிறதுக்கும் வேணுமல்லோ எனத் தொடர்ந்து கதைத்துக் கொண்டிருந்தாள் அந்தப் பொம்பிளைப் பிள்ளை. ஒரு கட்டத்தில் ‘மாமிக்கு என்னால குடுக்கேலாது. வேணுமன்டா நீங்கள் அவாவுக்கு தனியா அனுப்புங்கோ. என்னென்டாலும் செய்து துலையுங்கோ. இந்தக் காசு எனக்கு 15 நாளுக்கும் போதாது. இதுக்குள்ள அவாவும் கேக்குறாவோ என்ற கதையும் வந்தது.

‘லூசு கொஞ்சம் வெயிற் பண்ணுடா… இப்பத்தான் போம் நிரப்பிக் கொடுத்துட்டு இருக்கிறன். கொஞ்ச நேரம் செல்லும்’ யாழில் உள்ள பிரபல வங்கிக்கு காசு எடுக்கப் போனபோது ஒரு பொம்பிளை தனது கைத் தொலைபேசியில் இப்படி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

பார்த்தால் 35 வயது இருக்கும். நெற்றியில் பொட்டு இல்லை. ஒரு வேளை விதவையா இருக்கும் என்டு நினைத்துக் கொண்டு இருக்கும் போது தனது ‘பேர்ஸ்’ இல் இருந்து இன்னொரு கைத் தொலைபேசியை எடுத்தபோது அந்தப் பொம்பிளையின் நடவடிக்கையால் எனக்கு கொஞ்சம் ஈர்ப்பு ஏற்பட்டது. ‘பேர்ஸ்சில்’ .இருந்து எடுக்கும் போதே அந்த தொலைபேசியும் அனுங்கிக் கொண்டு இருந்தது.

ஒன்றை ஊகித்துக் கொண்டேன். தொலைபேசியில் இவளுடன் கதைப்பது இவளுடைய புருசனாகத்தான் இருக்கும். அப்போ அந்த லூசு யார்.? தலையைக் குழப்பிக் கொண்டு இன்று காசு வங்கியில் போடாவிட்டாலும் இவளுடன் கொஞ்சம் திரியத்தான் வேணும் என்று நினைத்துவிட்டு அவளுக்குப் பக்கதில் போய் நின்றேன். மெதுவாக எனது கைத்தொலைபேசியால் ஆசையாக அவளது முகத்தைப் பதிவு செய்தேன்.

அவளுடைய புருசனின் பெயருடன் இவளுடைய பெயரையும் வங்கியில் கூப்பிட்டார்கள். இவள் போகும் போது நானும் அருகில் போய் நின்றேன். 76ஃஃஃஃஃ என்ற இலக்கத்துடன் கூடிய அடையாள அட்டை. இவளுடைய வயது அறிந்தேன். பக்கத்தில் நான் போய் நின்ற போது என்னைப் பார்த்து விட்டு அங்கிள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ என்று அவள் சொல்ல எனக்கு வயிறு எரிந்தது. இவளுடைய புருசனின் வயதும் எனக்கு வராது. ஆனால் நான் அங்கிளாகி விட்டேனே என கோபத்துடன் அவளைப் பார்த்து விட்டு சற்று ஒதுங்கி நின்றேன்.

காசு எடுத்த சந்தோசத்தில் அந்தப் பொம்பிளை மீண்டும் தனது தொலைபேசிகளில் ஒன்றை எடுத்தது. அது சிமாட் போன் என்று சொல்லுற போன்களில் ஒன்று. டேய் எங்க நிக்கிறாய். கெதியாய் வாடா என தொலைபேசியில் தகவல் கொடுத்து விட்டு என்ர மருமகள் கர்ததிருந்தாள். (நான் அங்கிள் தானே)

நானும் சற்றுத் தொலைவில் வெளியே போய் நின்றேன். ஒரு பச்சை நிற ஆட்டோ சுழன்று கொண்டு வந்து அவளுக்கு அருகின் நின்றது. ஒரு 25 வயதுப் பெடியன் அவளை ஆட்டோவில் ஏற்றினான். ஏற்றும் போது அவனின் மண்டையில் தனது கைப் பையால் ஒரு அடி போட்டுவிட்டே ஏறினாள்.

அதனிடையில் அந்த இடத்தில் நின்ற ஒரு என்னைப் போல நடுத்தர வயதுக்காரன் இந்த இளைஞனை மறித்து ஏதோ சிரித்துக் கதைத்துவிட்டு அவனை அனுப்பினான்.

கதைத்த அந்த நடுத்தர வயதுக்காரரை அணுகி தம்பி ஆட்டோவில போறது அந்தப் பெடியனின் அக்காவோ என்று கேட்டேன். அவன் எதுக்குக் கேக்குறீங்கள் என என்னை சந்தேகமாகப் பார்த்தான். இல்லைத் தம்பி. அவள் அவனை அடித்ததைப் பார்த்தேன் அதுதான் என்று நான் இழுக்க….

அவன் ஒரு சின்ன வசனம் சொன்னான்.

அவன் ஓடுற ஆட்டோ அந்தப் பெண்ணின் கணவருடையது. அவர் சவுதிக்குப் போனப் பிறகு இவன்தான் வைச்சு ஓட்டுறான். நான் எனக்குள் நினைச்சுக் கொண்டு வந்தேன். இவன் சவுதியில இருக்கிற கணவரின் ஆட்டோவை மட்டும் ஓட்டவில்லை……………..

இந்த நினைப்புடன் நான் கரண்டு பில்லுக் கட்டாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்ர மனிசி என்னைத் தாறுமாறாய் ஏசத் தொடங்கினாள். அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுப் பெடியன் வந்து அங்கிள் நான் இப்ப பாங்குக்குப் போப்போறன். தாங்கோ என்றான். எனக்கு தெரியும் கரண் பில் கட்ட நீ முதல்ல உன்ர வேலையைப் பார்தக் கொண்டு போ என்று சீறி வீழுந்தேன்.

மனிசியும் என்னை வித்தியாசமாகப் பார்த்தாள். மனிசிட தலை நரைத்து விட்டாலும் இனி நான் அவளை விட்டு ஒரு நாள் கூட பிரியாமல் இருக்கிற வழியைப் பார்க்க வேணும். பொருளாதாரம் சிறப்பாக இருக்க வெளிநாடு போகும் ஆண்களே…!! பொருளாதாராத்தைப் பார்த்தால் உங்கள் தாரம் பொறுக்காதாரமாகப் போய்விடும் கவனம்.