Home ஆரோக்கியம் சளி, இருமல் இருக்கும்போது இதெல்லாம் சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்

சளி, இருமல் இருக்கும்போது இதெல்லாம் சாப்பிடாதீங்க… ரொம்ப டேஞ்சர்

17

பனிக்காலங்களில் எல்லோருக்குமே அடிக்கடி சளி, இருமல் உண்டாகும். அந்த சீசன் முழுக்க அது தொடரும். பனிக்காலத்தில் ஒருமுறை உங்களுக்கு சளி, இருமல் உண்டானால் அது சரியாக கொஞ்சம் நாள் பிடிக்கும்.

குளிரிலும் சளி பிடித்திருக்கும் போதும் பொரித்த அல்லது காரமாக இருக்கும் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவோம். அவை தொண்டைக்கு இதமாக இருக்கும். அதுபோல் சளி பிடித்திருக்கும்போது சில உணவுப் பொரட்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அது உங்களுடைய இன்னும் கொஞ்சம் தேவையில்லாத பிரச்னைகளில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சளி பிடித்திருகு்கும் புாது பொரித்த உணவுகள் தொண்டைக்கு இதமாக இருக்கும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் பொரித்த உணவுகளைக் கட்டாயம் சாப்பிடக் கூடாது. அது அதிக அளவிலான கொழுப்புச் சத்தினை உடையதாகையால் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். சளியைப் பொருத்தவரையில் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருந்தால் மட்டுமே விரைவில் குணமடையும்.

சளிக்கும் ஆல்கஹாலுக்கும் ஆகவே ஆகாது. அது இயல்பாகவே உங்களுடைய நோயெதிர்ப்பு ஆற்றலை குறைக்கும். உடலில் உள்ள நீர்ச்சத்துகு்களை உறிஞ்சி எடுத்துவிடும். அதனால் சளித்தொல்லை இருக்கும் பொழுது ஆல்கஹாலைத் தவிர்க்க வேண்டும்.

சளி, இருமல் இருக்கும் பொழுது சிட்ரஸ் பழங்களையும் வாழைப்பழத்தையும் முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். அப்படி சாப்பிடும் பொழுது, மூச்சுத் திணறல் உண்டாகும் வாய்பபு உண்டு.

சளி மற்றும் இருமல் சமயங்களில் பலரும் தொண்டைக்கு இதமாக இருக்குமென்று நன்கு காய்ச்சிய பாலைக் குடிப்பதுண்டு. ஆனால் அந்த சமயங்களில் பால் மட்டுமல்லாது, பால் சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

சர்க்கரை சேர்த்த எந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அவை நோயெதிர்பு்பு ஆற்றலைக் குறைக்கும். குறிப்பாக, வெள்ளைநிற சர்க்கரையை முற்றிலுமாக நீக்குதல் வேண்டும்.