Home பெண்கள் அழகு குறிப்பு சருமத்தில் தோல் உரியும் பிரச்சனையை தீர்க்கும் எண்ணெய்

சருமத்தில் தோல் உரியும் பிரச்சனையை தீர்க்கும் எண்ணெய்

16

வறட்சியான சருமம் உள்ளவர்களும் முகத்தில் தோல் உரிதல் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். மேலும் எண்ணெய் பசையின்றி சருமம் சுருக்கங்களுடன் அசிங்கமாக தோற்றத்தை தரும். எனவே இத்தகைய சரும வகையினர், தங்களது சருமத்தை எண்ணெய் பசையுடன் வைத்துக் கொண்டால், எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

தினமும் தயிரை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோல் உரிதலுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அழித்து, தோல் உரிதலைத் தடுக்கும். மேலும் தயிர் சருமத்தின் அழகை அதிகரித்து வெளிக்காட்டும்.

ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் தோல் உரிதல் பிரச்சனை படிப்படியாக குறையும்.

தினமும் அல்லது வாரம் 3 முறை ஆலிவ் ஆயிலில், ரோஸ் வாட்டர், சிறு துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்குரு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் மாஸ்க் போடலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் சதையை பாதுகாக்கும்.

தேங்காய் எண்ணெய் கூட தோல் உரிதலை தடுக்கும். அதிலும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து உறங்கினால், தோல் உரிவது குறைந்து, சரும வறட்சியும் நீங்கும்.

நல்லெண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும், தோல் உரிவது நின்றுவிடும். நல்லெண்ணெயை வாரம் இருமுறை உடல் முழுவதும் தேய்த்து ஆயில் மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து குளித்தால், அவை சரும வறட்சியை போக்குவதுடன், தோல் உரிவதையும் படிப்படியாக தடுப்பதை காணலாம்.