Home ஜல்சா சன்னிலியோனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

சன்னிலியோனுக்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

25

இந்தி கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் காண்டம் விளம்பரம் ஒன்றில் நடித்தார். இதற்கு பெண்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தன. மிகவும் ஆபாசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இது போன்ற விளம்பரங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், “ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். இந்த வி‌ஷயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.