Home பெண்கள் உணவு உடல் சத்தான தங்கம் பாப்கார்ன்: ஆய்வில் தகவல்

சத்தான தங்கம் பாப்கார்ன்: ஆய்வில் தகவல்

26

பாப்கார்னில் அதிக அளவு ஆன்டி அக்ஸிடென்ட்ஸ் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே காய்கறி பழங்களைக் காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர். இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி

பழங்கள் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி 114 மில்லி கிராம் உள்ளது அதேசமயம் பாப்கார்ன் 300 மில்லி கிராம் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது. இதை நன்றாக மென்று தின்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்சத்தும் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். பாப்கார்னில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன.

நன்மை தரும் பாப்கார்ன்

ஒரு கிண்ணம் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்த்துவிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதில் அடங்கியுள்ள தாது உப்புக்கள், ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியாதாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது உடலுக்கு அதிக நன்மை தரக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான தங்கம்

பிற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவேதான் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என்றும் ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர்.