Home சமையல் குறிப்புகள் கோழி தக்காளி சூப்

கோழி தக்காளி சூப்

27

தேவையானப் பொருட்கள்:


§ தக்காளி – 4
§ கோழிக்கறி – ஒரு மார்பு துண்டு
§ நடுத்தரமான வெங்காயம் – அரை
§ பூண்டு – 3 பல்
§ இஞ்சி – சிறுதுண்டு
§ கொத்தமல்லித்தழை – சிறிது
§ முட்டை – 2
§ கார்ன்ஸ்டார்ச் – 2 மேசைக்கரண்டி
§ சிக்கன் ஸ்டாக் – 4 கப்
§ எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
§ தக்காளி சாஸ் – 4 மேசைக்கரண்டி
§ உப்பு – தேவையான அளவு
§ சீனி – ஒரு தேக்கரண்டி
§ மிளகுத்தூள் – அரைத்தேக்கரண்டி
§ அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை
§ வினிகர் – 2 மேசைக்கரண்டி
செய்முறை:
§ தக்காளி, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
§ கோழிக்கறியினை துண்டங்களாக்கி நான்கரை கோப்பை தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த வேக வைத்த நீர்தான் சிக்கன் ஸ்டாக்.
§ முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்து கலந்து கொள்ளவும். அரை கப் சிக்கன் ஸ்டாக் உடன் கார்ன்ஸ்டார்சினை கலந்து கொள்ளவும்.
§ ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டினை போட்டு லேசாக வதக்கவும். அத்துடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து மேலும் ஒரு நிமிடத்திற்கு வேகவிடவும்.
§ பிறகு தக்காளி சாஸ், நறுக்கின தக்காளி சேர்த்து, தீயை சற்று அதிகம் வைத்து மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும்.
§ இப்போது சிக்கன் ஸ்டாக், சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, அஜினோமோட்டோ, மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும்.
§ பிறகு கார்ன்ஸ்டார்ச்சினை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும். சூப்பானது சற்று கெட்டியாகும் வரை சேர்த்து விடாது கலக்கவும்.
§ அதன் பின் வினிகரை ஊற்றவும். அடித்து வைத்துள்ள முட்டையினை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கலக்கவும். முட்டையானது நன்கு வெந்து மிதக்கத் தொடங்கும்போது நறுக்கின கொத்தமல்லித் தழையினைத் தூவி இறக்கவும்.