Home சமையல் குறிப்புகள் கோழி ஈரல் வறுவல்

கோழி ஈரல் வறுவல்

29

கோழியின் கல்லீரலில் இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. இரும்புசத்தானது நமது உடலில் புதிய ரத்த செல்களை உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இந்த சிக்கன் ஈரல் வறுவலை சாதம், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

தேவையான பொருட்கள்

கோழி ஈரல் – 200 கிராம்
பூண்டு – 5 (நறுக்கியது)
கருவேப்பிலை – 6
சின்ன வெங்காயம் – 4
பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 100 மில்லி

செய்முறை

கோழியின் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கி எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மிளகாய் வற்றல், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும். பிறகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

ஈரலுடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து சிறிது நிமிடங்கள் வேகவிட்டு, அதில் இறுதியாக கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்க்கவும்.

நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான ருசியான சிக்கன் ஈரல் வறுவல் ரெடி!!!