Home சமையல் குறிப்புகள் கோழிக்கறி (இலங்கை முறை)

கோழிக்கறி (இலங்கை முறை)

23

கோழி இறச்சி ஒரு கிலோ அளவாக வெட்டியது
பச்சை மிளகாய் 10 சிறிதாய் நறுக்கியது
ஏலக்காய் 5
கருவாப்பட்டை 3
பெரிய வெங்காயம் 2 நறுக்கியது
மல்லி தூள் 2 தேக்கரண்டி
ஜீரகம் 1 தேக்கரண்டி
ஜீரகம் தூள் 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் தூள் 1 தேக்கரண்டி
கறிமசாலா 2 தேக்கரண்டி
எண்ணெய் 4 மேசைக்கரண்டி
மஞ்சள் 2 தேக்கரண்டி
பூண்டு 4 பற்கள்
இஞ்சி பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
கெட்டியான தேங்காய் பால் 1 கப்
நல்லமிளகு தூள் தேவைக்கு
கருவேப்பிலை தேவைக்கு
உப்பு தேவையான அளவு
தயார் செய்யும் முறை:
முதலில் இறைச்சியை நன்றாக கழுவி ஓரளவு பெரிய துண்டாக நறுக்கி உப்பும் மஞ்சளும் இறைச்சியில் நன்றாக கலந்து இறைச்சியை ஊற வைக்கவும்.
வெங்காயங்களை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு எண்ணை சூடானதும் ஏலக்காய் கருவாப்பட்டை பூண்டு கறிவேப்பிலை ஜீரகம் போட்டு வதக்கியதும் பச்சை மிளகாயை போட்டு அது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் போடவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் 1 தேக்கரண்டி மஞ்சள் போடவும்.
மஞ்சள் வாசனை நீங்கியதும் இஞ்சிபூண்டு அரைப்பையும் போட்டு மீதமுள்ள கறிமசாலா ஜீரகம் மல்லி நல்ல மிளகு தூள்களையும் போட்டு
இறைச்சியையும் போட்டு நன்றாக கிறளி மூடி வைத்து 20 நிமிடம் வேக விடவும்.
அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
நன்றாக வெந்ததும் தேங்காய் பால் விட்டு ஓரிரு தடவை கொதித்ததும் பால் பச்சை வாசனை போய் ஓரளவு வற்றியதும் இறக்கிவிடலாம்.