Home சமையல் குறிப்புகள் கோபி மஞ்சூரியன் (காலிபிளவர் மஞ்சூரியன்)

கோபி மஞ்சூரியன் (காலிபிளவர் மஞ்சூரியன்)

20

தேவையான பொருட்கள்
காலிபிளவர் – 1 நடுத்தரமானது
மைதா – 2 மேசைக்கரண்டி
கார்ன்மாவு–2மேசைக்கரண்டி (மே.கர ண்டி)
அரிசி மாவு – 1/2 மே.கரண்டி(விருப்பமெனில்)
இஞ்சி, பூண்டு விழுது – 1 மே.கரண்டி
வெது வெதுப்பான தண்ணீர்- 1/2 கப்பிற கும் குறைவாக
உப்பு – தேவையான அளவு
சாஸ் தயாரிக்க
வெங்காயத்தாள் – 1 /4 கப்
குடமிளகாய் நீளமாக மெல்லியதாக நறுக்கியது – 1 /2
பொடியாக நறுக்கிய பூண்டு – 1 1/2 மே. கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி – 1/2 மே. கரண்டி
பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
மிளகாய்த்தூள்(காஷ்மிரி) – 1 தேக்கரண்டி
சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
சில்லி சாஸ் – 1 மே.கரண்டி
வினிகர் – 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 3 மே.கரண்டி
கருப்பட்டி (பிரவுன் சுகர்) – 1 /2 தேக்கரண்டி (விருப்ப மெனில்)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 1 1 /2 மே.கரண்டி
மல்லித்தழை பொடியாக நறுக்கியது – 1 மே.கரண்டி
செய்முறை
காலிபிளவரை சிறு பூக்களாக பிரித்தெடுத்து உப்பு சேர்த்த கொதிக்கும் நீரில் 10 – 12 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
ஒருஅடி கனமான பாத்திரத் தில் பொரிப்பதற்கு தேவை யான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
இன்னொரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, கார்ன்மாவு, உப்பு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது மற்றும் சிறிது தண்ணீர் சேர் த் து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
காலிபிளவரை தண்ணீரில் இருந்து வடித்து வைத்துக் கொள்ளவும். பின் ஒவ்வொரு பூவையும் பிசைந்து வை த்துள்ள மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்கவும். எண் ணையை மிதமான சூட்டில் வைத்து கோபி வெந்ததும் எடுத்து விடவும்.
கோபி வெந்ததும் அடுப்பின் சூட்டை அதிகப்படுத்தி பொ ன்னிறமாகும் வரை பொரித் தெடுக்கவும்.
சாஸ் தயாரிக்கும் முறை
ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானது ம், நறுக்கிய பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வெங்கயத்தாளின் வெள்ளைப்பகுதி யை மட்டும்சேர்த்து அதிகமான தீயில் 4நிமிடங்கள் வதக்கவும். பின் குடமிளகாய் சேர்த்து 3நிமிடங்கள்வரை வதக்கவும். குடமிளகாயை பாதி வேக வைத்தால் போதுமானது. வதக்கிய பின்பும் குடமிளகாய் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.
அடுப்பின்சூட்டைக் குறைத்து கருப்பட்டி, சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ் மற் றும் வினிகர் சேர்த்து 2 நிமிடங்க ள் வரை வேக விடவும்.
பின் 3–4 மேசைக்கரண்டி தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் வேக விடவு ம்.
இறுதியாக பொரித்து வைத்துள்ள காளிபிலவரைச் (கோபியைச்)சேர்த்து 2நிமிடங்கள் அதிகமான சூட்டில் வதக்கவும்.
அடுப்பை அணைத்து பொடி யாக நறுக்கிய பச்சை வெங் காயத்தாள் மற்றும் மல்லித் தழை தூவி பரிமாறவும்.