Home பெண்கள் அழகு குறிப்பு கை, கால் முடி அழகை கெடுக்குதா? இதை படிங்க…

கை, கால் முடி அழகை கெடுக்குதா? இதை படிங்க…

22

பெண்களின் சருமத்தில் அழகைக் கெடுக்கும் வகையில் முடியானது மொசு மொசுவென பூனையின் முடியைப் போல வளர்ந்து, அவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கையை குறைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு இருப்பவர்கள் சருமத்தை மிருதுவாக வைக்க முகம், கை, கால்களில் இருக்கும் முடிகளை கடைகளில் விற்கும் ஹேர் ரிமூவிங் கிரீம்களைப் பயன்படுத்தி நீக்குகின்றனர். ஆனால் அவ்வாறு உடலில் இருக்கும் முடிகளை நீக்குவது அப்போதைக்கு மட்டும் தான். அதை தொடர்ந்து செய்யாவிட்டால் பிறகு காடு போல் வளர்ந்துவிடும். மேலும் அத்தகைய க்ரீம்கள் சிலருக்கு ஸ்கின் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆகவே அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்தி ரோமங்கள் நீக்குவதை விட எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையான முறையில் எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் எளிதாக நீக்கலாம். அத்தகைய பூனை ரோமத்தை நீக்குவது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

1. கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு மற்றும் சீயக்காய் பொடி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அத்துடன் எலுமிச்சைத் தோல் மற்றும் வேப்பங் கொழுந்து எடுத்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அதோடு கஸ்தூரி மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடியானது படிபடியாக குறைந்து, தோலும் மென்மையாகும். மேலும் சருமத்திற்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகமாகி, எந்த ஒரு தோல் நோயும் எப்போதும் வராது.

2. மாதுளைத் தோல் மற்றும் கருந்துளசியை வெயிலில் நன்கு காய வைத்து, அத்துடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை முட்டையின் வெள்ளைக் கருவோடு கலந்து, தினமும் படுக்கும் முன் முடி உள்ள பகுதிகளில் தடவி, மறுநாள் காலையில் எழுந்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் முடியானது உதிரிந்துவிடும்.

3. கடலை மாவுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிது தண்ணீர் விட்டு கலந்து, முடிகள் உள்ள இடங்களான முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஒரு துணியை குளிர்ந்த நீரில் நனைத்து துடைத்தெடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் முடியானது இல்லாமல் போகும்.

4. குப்பைமேனி இலை மற்றும் வேப்பங்கொளுந்து எடுத்து, அதோடு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் அந்த கலவையோடு பன்னீர் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, மறுநாள் கழுவிட வேண்டும். அதனால் நாளடைவில் முடியானது காணாமல் போகும்.

மேற்கூறியவாறெல்லாம் செய்தால் தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை வளராமல் ஈஸியாக தடுக்கலாம்.