Home சமையல் குறிப்புகள் கேசரி

கேசரி

23

ravakesari-1ரவை & 1 ஆழாக்கு சர்க்கரை & 2 ஆழாக்கு கேசரி பவுடர் & 1/4 தேக்கரண்டி ஏலக்காய் & 6 முந்திரி & 8 திராக்ஷை & கொஞ்சம் (12) நெய் & 50 கிராம்

வாணலியை அடுப்பில் வைத்து 2 தேக்கரண்டி நெய்யை ஊற்றி ரவையைப் போட்டு வறுக்கவும். சற்று சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து, தட்டில் கொட்டவும்.. மூன்று தம்ளர் தண்ணீரை வாணலியில் ஊற்றி கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதித்ததும் ரவையை அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி,கிளறிக் கொண்டே இருக்கவும். ரவை வெந்து கெட்டியானதும் சர்க்கரையை அதில் போடவும். கேசரிப் பவுடரையும் தூவி அடுப்பை சற்று நிதானமாக எரிய விட்டு கிளறவும்.

சர்க்கரை இளகி, ரவையோடு சேர்ந்து ஒன்றாகும்படி கை விடாமல் கிளற வேண்டும். சர்க்ரையும் ரவையும் சேர்ந்து கெட்டியானதும் நெய்யை ஊற்றி ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும். ஏலத்தை பொடி செய்து போடவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரியையும் திராக்ஷையையும் வறுத்து, கேசரியில் போட்டுக் கிளறவும்.