Home உறவு-காதல் கெமிஸ்ட்ரி சார் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சா?

கெமிஸ்ட்ரி சார் கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சா?

24

ரொமான்சும், காதலும் கூட படிப்பவர்களுடன், வேலை பார்ப்பவர்களுடன்தான் வரவேண்டுமா? என்ன அன்பான ஆசிரியரிடம் கூட வரலாமாம். ஆனால் அந்த ரொமான்ஸ் சரியா வருமா? குரு சிஷ்யை உறவில் எப்படி காதலை புகுத்துவது இது நீதியாகுமா? என்றெல்லாம் யோசிக்க தொடங்கிவிடாதீர்கள். எத்தனையோ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர் – மாணவி இடையேயான ரொமான்ஸ் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதனால் இந்த ரொமான்ஸ் ஏற்படுகிறது? இது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பதை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

டீச்சர் மேல ஏன் ரொமான்ஸ்

வீட்டில் அப்பாவிற்கு அடுத்தபடியாக அதீத உரிமையோடு பழகுவது ஆசிரியரிடம் மட்டுமே. அன்பாய், அக்கறையாய் நடத்துவது ஆசிரியர்தான். இந்த அதீத அக்கறையே ஆசிரியர் மீதான அன்பை அதிகரிக்கிறது. அழியாத கோலங்களில் பாலுமகேந்திராவிற்கு கிடைத்த டீச்சர் மாதிரி எல்லோருக்கும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் ஆசிரியர் அமைந்து விடுகிறார். ஆசிரியர்தான் ஹீரோ என்று நினைக்கத் தொடங்குவதால் அதுவே பின்னாளில் ஒருவித காதலாக மாறுகிறது.

ஆசிரியர் மீதான காதல் நீதிநெறிக்கு உட்பட்டதா என்பதைப் பற்றி எத்தனையோ விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இந்த உறவுமுறை சற்றே சம்திங் ஸ்பெசல் ரொமான்ஸ்தான். அந்த எட்டுமணிநேரம் ஆசிரியருடன் இருக்கும் நேரம் மட்டுமே உலகத்தின் உன்னத தருணமாக நினைக்கத் தோன்றும். அந்த ஆசிரியர் திருமணமானவராக இருந்தாலோ, ஆசிரியரின் மனைவி அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்த்தாலே அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மனம் கவர்ந்த ஆசிரியரைப்பற்றி மட்டுமே மனம் நினைப்பது சற்றே குழப்பமான காதல்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

இது எதுமாதிரியான காதல்?

குரு – சிஷ்யை உறவு என்பது தெய்வீகமானது. இதனை எந்த விதத்திலும் தவறாக உபயோகப்படுத்தக் கூடாது. ஆசிரியர் மீது மாணவிக்கு காதல் வருவது என்பது ஒருவேளை எதிர்பாராத நிகழ்வாக இருந்தாலும், விபரம் அறிந்த ஆசிரியர்கள் அதனை நெறிப்படுத்தவேண்டும். இதுதான் உண்மையான குருவிற்கு உரிய லட்சணம் என்கின்றனர் நிபுணர்கள். அதை விடுத்து மாணவி காதல் வயப்படுகிறார் என்பதற்காக அதை தவறான வழியில் பயன்படுத்திக்கொள்வது நீதியல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

காதல் என்பது இருபாலரிடையே ஏற்படக்கூடிய அன்பான விசயம்தான். அது ஆசிரியர் – மாணவி என்றெல்லாம் பார்க்காது என்று கூறுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எனவே ஆசிரியர் தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் அன்பான அக்கறையான ஆசிரியர்களுடன் மரியாதை கலந்த நட்புணர்வோடு பழகுவதே நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.