Home குழந்தை நலம் குழந்தை பராமரிப்பு பற்றி தெரியுமா

குழந்தை பராமரிப்பு பற்றி தெரியுமா

25

இன்றைய காலச்சூழலில் திருமணத்திற்கு பின்பு ஓர் ஆண்டு காலம் வரை தம்பதிகளுக்கு நடுவில் காதல் அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆனால் உங்கள் வீடு குழந்தைகளால் நிறைந்திருக்கிறது என்றால் வீட்டின் ஒட்டு மொத்த சூழலும் மாறிவிடும். அப்போது வீட்டில் இருந்த சந்தோஷம் மேன்மேலும் அதிகரித்து ஆனந்தம் பெருகும்.
குழந்தைகள் துருதுருவென செய்யும் சேட்டைகளால் தான் நம் வீட்டிற்கே வெளிச்சம் உண்டாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வளர்க்கவும் தங்களின் பெற்றோர்களின் உதவியை நாடியது எல்லாம் அந்தக் காலம். இன்றைய தாய்மார்களோ, தங்கள் வேலைகளில் எப்போதும் மூழ்கி போய்விடுவதால், தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
அதனால் இந்த பிரச்சனையை போக்க, இன்றைய தாய்மார்களுக்கு குழந்தை பராமரிப்பு பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தைக்கென எப்போதும் நீங்கள் இருக்க வேண்டும். இது அவர்களுக்கும் உங்களுக்குமான இறுக்கத்தை அவர்களின் மழலை பருவத்தில் இருந்தே அதிகரித்துவிடும். பணத்தின் அருமை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ஒவ்வொரு குழந்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நாணயம் மற்றும் ரூபாயின் மதிப்பைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வயதை அடைந்ததும் தான் உண்ணும் சாக்லெட்டின் விலையை பற்றி கண்டிப்பாக குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் குறைந்தது 3 மணிநேரமாவது ஒன்றாக செலவிட வேண்டும்.
எவ்வளவு வேலை பளு இருந்தாலும் கூட, இதனை செய்ய தவறக் கூடாது. இன்றைய தாய்மார்களும், தந்தைமார்களும் தங்கள் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவிடுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையின் அடிப்படையை பற்றி குழந்தைக்கு சொல்லி கொடுக்க தாய் மற்றும் தந்தை என இருவருமே தேவை.
இன்றைய தலைமுறை தாய்மார்கள் பார்ட்டிகளுக்கு செல்லவும், நண்பர்களுடன் பொழுதை கழிக்கவும் அதிகமாக விரும்புகின்றனர். இருப்பினும் பார்ட்டிக்கு செல்லும் போது, குழந்தைகள் நிறைந்துள்ள பார்ட்டிகளுக்கே செல்ல வேண்டும். அதனால் மற்ற குழந்தைகளுடன் எப்படி பழகி நண்பர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகளை ஊக்கப்படுத்துவது நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான குழந்தை வளர்ப்பு டிப்ஸாகும். இன்றைய தாய்மார்கள் தங்கள் குழந்தையை அதன் சின்ன வயதிலுருந்தே ஊக்கப்படுத்த தொடங்க வேண்டும். இந்த ஊக்கம் அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களின் சுய மதிப்பை வளர்த்துவிடும்.