Home பெண்கள் தாய்மை நலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!

குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சனைகள் ஒரு பார்வை!

19

‘நெய்க்கு தொண்ணை ஆதாரம்; தொண்ணைக்கு நெய் ஆதாரம்’ என்று பழைய கிராமத்து ப‌ழமொழி ஒன்று உண்டு. நெய் கீழே கொ ட்டிவிடாமல் தொண்ணை பாதுகாக்கும். தொண்ணை காற் றில் பறக்காமல், நெய் பார்த்து க்கொள்ளும்’ என்பது தான் இதன் பொருள். அதுபோலத்தா ன் குழந்தையின்மையும் செக் ஸும்.
குழந்தையின்மையால் ஏற்படுகின்ற செக்ஸ் பிரச்னைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
திருமணத்துக்குப் பிறகு ஓர் ஆணுக்கு குழந் தை இல்லை எனில், திரும ணமான ஆரம்ப காலங்களில் செக்ஸ் மீது இருந்த தீவிர ஆர்வமானது, குழந்தையின்மை காரணமா க மெள்ள மெள்ள சலிப்பாக மாறிவிடும். ‘என்ன செய்து என்ன பிரயோஜனம்?’ என்று மனம் சோர்வு வலை பின்னத் தொட ங்கி விடும்.
குழந்தையின்மையால் ஏற்படுகிற செக்ஸ் பிரச்னையில் மிக முக்கியமா னது, விறைப் புத்தன்மைக் குறைபாடு. இந்தப் பிரச்னை ‘கொஞ்சுவதற்கு ஒரு மழலை இல்லையே…’ என்கிற வேத னை ஆழ் மனதில் படிந்து, கவலை ரேகையின் காரணமாக ஏற்படுகி றது. அடுத்து குழந்தை இல்லாதவர்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் மண்டிவிடும். இதனாலும் ஆணுறுப்பில் எழுச்சி இல்லா மல் போ கலாம். மனித மனமான து பயனின்றி எந்த செயலிலும் பெரிதும் ஈடுபடாது. குழந்தையி ல்லாதவர்கள் இன்பத்துக்காக, சுகத்துக்காக செக்ஸில் ஈடுபடு வதை பெரிதும் விரும்ப மாட்டா ர்கள். இது போன்ற சூழலில் இவர் களுக்கு நாளடைவில் செக்ஸ் மீது ஒரு வித இனம் தெரியாத வெ றுப்பு வந்துவிடும்.
ஓர் ஆண் மருத்துவரிடம் போகும்போது, அவர் பலவிதமான பரிசோ தனைகளை மேற்கொண்டுவிட்டு, மருந்து மாத்திரைகளை சிபாரிசு செய்து, அத்துடன் சில தினங்களை குறிப்பிட்டு ‘இந்த நாட்களி ல் எல்லாம் உங்கள் மனைவியுடன் உடலுற வு வைத்துக் கொள்ளுங்கள். இந்தந்த தின மெல்லாம் குழந்தை உருவாக வாய்ப்பு உண் டு’ என்று சொல்லியிருப்பார். டாக்டர் சொன் னபடி அந்த தினங்களில் மனதில் ஆசை சிற கு விரிய,. விரிய செக்ஸில் ஈடுபட முனை வர். ஆனால், ஆணுறுப்பு எழுச்சி அடையா து. அதாவது, இயல்பான ஆர்வத்துடன், ஆனந்தமாகக் கூடாமல்… இயந்திரத்தனமாக அதில் ஈடுபடுவதா ல் இது போன்ற பாதிப்பு ஏற்படலாம். இதற்கு மருத்துவ மொழியில் ‘இன்எபிளி ட்டி டு எஜாகுலேட் ஆன் டிமாண்ட்’ என்று பெயர்.
இனி, குழந்தையின்மையால் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச் னைகளையும் தெரிந்துகொள்வோம்.
கணவனைப் போலவே மனைவிக்கு ம் செக்ஸ் மீதான ஆர்வம் இல்லாமல் போய்விடுவதுதான் குழந்தையின் மையால் ஏற்படுகிற முதல் செக்ஸ் பாதிப்பு. இதற்கு மனதில் ஏற்படுகிற வெறுப்பும், இயலா மையும், தனக் குள்ளேயே புழுங்கித் தவிக்கும் மனநிலை, கழிவரக் கம் இவைதான் காரணம். கிட்டத்தட்ட உளவியல் பிரச்னையால் ஏற்படுகிற செக்ஸ் பிரச்னை என்றுகூட இதனைக் குறி ப்பிடலாம்.
குழந்தையின்மையால் ஏற்படுகிற குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான் மை, எதிர்மறையான எண்ணங்கள் எல்லாம் செக்ஸ் மீது இருந்த ஆர்வத்தை நறுக்கி எறிந்துவிடும். இத னால், உடலுறவில் ஈடுபடுகிற சமயத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் எளிதான உராய்வுக்காக சுரக்கும் நீரான து சுரக்காமல் போய்விடும். இதனால் உடலுறவின் போது வலி, எரிச்சல் ஏற் பட்டு இன்பப்பொழுதை கசப்புக்குரியதா க் கிவிடும். இந்தப் பிரச்னைக்கு ‘டிஸ் பெர்னியா’ என்று பெயர்.
செக்ஸ் என்பது உள்ளம் தொடர்பான ஓர் உறவு. போலி மருத்துவர் கள், லேகியம் விற்பவர்கள், லாட்ஜ் டாக்டர்கள், ‘இரவில் வீடு செல்லத் தயக் கமா?’ என்று விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். பொதுவாக குழந் தையில்லாத தம்பதிகளுக்கு ‘ஏண்டா … ராத்திரி வருது?’ என்ற வெறுப்பு உணர்வு மனக்கிளையில் கூடுகட்டியி ருக்கும். இதற்கு திஸ் நைட் சிண்ட் ரோம் என்று பெயர்.
இதுபோன்ற மனநிலையை நூலாகப் பிடித்துக்கொண்டுதான் போலி மருத்துவர்கள் தங்கள் தொழில் பட்டத்தைப் பறக்கவிடுகிறார்கள். இதி ல் உணர்வுதான் முக்கியமானதும் முதன்மையானதும். குழந்தையி ன்மைக்கு முதலில் பலியாவது சம்பந்தப்பட்டவர்களின் உணர்வு தான். இப்படியான உணர்வு சிதை வு செக்ஸ் விருப்பத்தின் வேர்களி ல் வெந்நீர் ஊற்றுகிற வேலையை செய்துவிடும்.
பொதுவான பிரச்னைகள்:
செக்ஸ் திறமைக்குறைவு என்ற எண்ணம் இருவருக்குமே வந்து விடும்.
எப்போதும் இனம் தெரியாத மனப் பதற்றம், விரக்தி குடிபுகும்.
தங்களைத் தாங்களே நொந்துகொ ள்கிற விக்டிம் மென்டாலிட்டி நிலை உருவாகும்.
கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் காரணகர்த்தா வாக்க முயற்சிப்பார்கள். இதனால் வீடே சந்தைக்காடாகும்.
செக்ஸ் பிரச்னை தீர:
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத் தக் கூடாது. குழந்தையின்மைக்கு உண்மை யான காரணம் என்ன என்று கண்டறி ந்து, அதனைக் களைய முயற்சிக்க வேண்டும்.
இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் குழந்தையின் மைப் பிரச்னைக்கு பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. அதன் மூலம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும்.
திருமணத்தின் நோக்கம் குழந்தை பெற்றெடு ப்பதும்தான். குழந்தை பெற்றெடுப்பது மட்டு மே அல்ல என்பதை தம்பதி புரிந்துகொள்ள வேண்டும்.