Home குழந்தை நலம் குழந்தைகள் விரும்புவதை படிக்க விடுங்கள்…!

குழந்தைகள் விரும்புவதை படிக்க விடுங்கள்…!

17

நீல் கேமேன் வருங்காலத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றிய கருத்தரங்கில் பங்குபெற்று பேசிய நீல் கேமேன், குழந்தைகள் இடையே புத்தகம் படிக்கும் திறனை குறையாமல் பெற்றோர்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அத்தோடு, குழந்தைகள் விரும்பும் புத்தகத்தை படிக்க அவர்களுக்கு சுதந்திரம் வழங்கவேண்டும் என்றும் கூறினார். இப்பொழுது, இணையதளங்களில் புத்தகங்கள் வந்துவிட்டதால், நூலகங்கள் அழிந்து விடும் என்று நினைக்கிறார்கள்.அப்படி நினைப்பது அர்த்தமற்றது, முட்டாள்தனமானது. நூலகங்களுக்கு என்றுமே அழிவில்லை என்று கூறினார்.
மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ’டகுலஸ் ஆடம்ஸ்’ என்ற ஆசிரியர் கூறியதை கருத்தரங்கில் நினைவு கூர்ந்தார், “புத்தகங்கள், சுறாக்கள் போல. சுறாக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் வாழ்கின்றன. அதே போல, புத்தகங்களும் எப்போழுதும் நிலைத்து இருக்கும் “, என்று குறிப்பிட்டார்.