Home குழந்தை நலம் குழந்தைகள் குறட்டைவிடுவது ஆரோக்கியமானதா?…

குழந்தைகள் குறட்டைவிடுவது ஆரோக்கியமானதா?…

10

குழந்தைகளை எவ்வித குறையுமின்றி, நற்பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொடுத்து, ஆரோக்கியமாக அவர்களை வளர்க்க வேண்டியது உங்கள் கடமையாகும். குழந்தைகளை சில பழக்கங்கள் பெரிதும் பாதிக்கின்றன.

அவற்றை நீங்கள் அறிந்திருந்தும், அதனை நீங்கள் கண்டு கொள்வதில்லை; அவற்றை சரிசெய்ய பெரிதாய் அக்கறை காட்டுவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளின் சில மோசமான பழக்கங்கள் பற்றி பார்க்கலாம். குறிப்பாக, குழந்தைகள் குறட்டை விடுவது சரியா தவறா என பார்க்கலாம்.

குறட்டை என்பது சுற்றியிருப்பவர்களை தொந்தரவு செய்யக்கூடியது என்று மட்டுமே நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் குறட்டையால் உடலின் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் ஏற்படுகின்றது என்பதை நாம் அறிவதில்லை. குழந்தைகள் குறட்டை விட்டால், முதலாக அவர்களின் கற்றல் திறன் பாதிப்படைகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

11 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,300 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அக்குழந்தைகள் அதிக அளவில் குறட்டை விடுகின்றனர் என்றும், தொடர்ச்சியாக குறட்டைவிடும் குழந்தைகள் பகலில் மிகவும் களைப்படைந்தவர்கள் போல் இருப்பதாகவும், படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பவர்களாகவும், அவதானிக்கும் திறன் குறைந்தவர்களாகவும், மந்த வளர்ச்சி நிலை உடையவர்களாகவும் காணப்படுகின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய கால குழந்தைகள் சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளையே உண்ணுகிறார்கள். இது பெற்றோர்களுக்கு சர்வ சாதாரணமாக தோன்றினாலும், குழந்தைகள் வளர வளர உப்பு அதிகமுள்ள உணவுகளுக்கு அடிமையாகி, இது ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. அதிக உப்பு சேர்த்த உணவுகளை உண்பதால், குழந்தைப் பருவத்திலேயே உடல் பருமன், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், வாதம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படலாம்.

இந்நோய் பாதிப்புகளைத் தடுக்க, குழந்தைகள் பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்; மேலும் இளம்வயதிலேயே, அதாவது குழந்தை பருவத்திலேயே ஆரோக்கியமான உணவுமுறை குறித்து கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டும், காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளுமாறு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உங்கள் குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உங்களின் இன்றைய குழந்தைகள் இருமடங்கு உப்பை உண்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த மோசமான உண்மையை, உணர்ந்து பெற்றோர்கள் ஆரோக்கியமான உணவு முறையை குழந்தைகளுக்கு பழக்க முயற்சிக்க வேண்டும்.