Home குழந்தை நலம் குழந்தைகளின் உறக்கம்

குழந்தைகளின் உறக்கம்

11

பிறந்த குழந்தை பசிக்காக அழும் நேரத்தைத் தவிர பல மணி நேரங்களை உறக்கத்திலேயேக் கழிக்கின்றன. குழந்தை நலமாகவும்,சுகமாகவும் இருந்தால் பொதுவாக நீண்ட நேரம் உறங்கும். பசி அல்லது அசௌகரியமான நிலை ஏற்படும் போதுதான் அழுகின்றன.

ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரத்தில் இருபத்து இரண்டு மணி நேரம் வரை குழந்தைகள் உறக்கத்திலேயே இருக்கும். இந்த உறக்கம் தொடர்ந்து நீடிக்காமல், அவ்வவப்போது சிணுங்குதல்,கை, கால்களை அசைத்து விளையாடுவது என சில அசைவுகளுக்குப் பிறகு மீண்டும் உறங்குவது போன்று அமையும். குழந்தை தூங்கும் சமயத்தில் அவர்களுக்கு பாலூட்டுவதும், நனைந்த ஆடைகளை மாற்றி விடுவதும் தாயின் கடமையாகிறது. இதுதான் அவர்களது உறக்கத்தை நீடிக்கச் செய்யும் வழியாகும்.