Home ஜல்சா குண்டாக இருந்தால் அனுமதி இல்லை: நிர்வாண ஹொட்டலின் கடுமையான விதிகள் இதுதான்!

குண்டாக இருந்தால் அனுமதி இல்லை: நிர்வாண ஹொட்டலின் கடுமையான விதிகள் இதுதான்!

12

2871-1-95c689bf4be967d42697568c180d5897ஜப்பானின் முதல் நிர்வாண ஹொட்டல் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் திறக்கப்படுகிறது.

முன்னதாக அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும், லண்டனிலும் நிர்வாண ஹொட்டல் திறக்கப்பட்டன.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜப்பானின் முதல் நிர்வாண ஹொட்டல் தலைநகர் டோக்கியோவில் யூலை 29ம் திகதி திறக்கப்படுகிறது. இதற்கான கடுமையான விதிமுறைகளை ஹொட்டல் நிர்வாகம் தயார் செய்துள்ளது.

ஹொட்டலின் இணையதள தகவல் படி, 18 முதல் 60 வயதுக்குட்பட்டோரை மட்டுமே அனுமதிக்க முடியும். உடல் எடை அதிகமாக இருப்போர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதாவது உயரம் மற்றும் எடையின் சராசரில் கூடுதலாக 15 கிலோ இருப்பவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.

ஹொட்டலின் உள்ளே நுழைந்த பிறகு உடைகளை அவிழ்த்து ஒரு பையில் போட்டுவிட வேண்டும், ஹொட்டலில் கொடுக்கப்படும் உள்ளாடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

ஹொட்டலுக்கான வருகை ஆன்லைனில் முன்னதாக உறுதி செய்யப்பட்டு கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும்.

ஹொட்டலுக்கு வரும் மற்ற வாடிக்கையாளர்களுடன் பேசவோ, அவர்களை தொடவோ கூடாது. தொந்தரவு கொடுப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

மொபல் போன், கமெரா என கொண்டு வந்திருக்கும் பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கும் லாக்கரில் வைத்து பூட்டி விட வேண்டும். டாட்டூ குத்திக்கொண்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்ட ஆண்கள் உள்ளாடையுடன் உணவு பரிமாற 750 டொலர்கள் வசூலிப்படுகிறது. தவிர, நடன நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தனித்தனியாக பணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.