Home குழந்தை நலம் குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?

குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?

34

காலையில் பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் அள்ளிவிழுங்கி விட்டு ஓடும் குழந்தைகள் மதிய உணவுக்கு எதையாவது டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் ஆறிப்போன உணவுகளை விருப்பமில்லாமல் சாப்பிட்டு வருகின்றனர். மாலையில் விளையாடும் ஆர்வத்தில் சரியாக சாப்பிடுவதில்லை. மேலும் இன்றைய குழந்தைகளுக்கு பீட்ஸாவும், பர்கரும், கார்பனேட் அடங்கிய குளிர்பானங்களும் வழங்கப்படுகின்றன. இதனால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் பெரும்பாலான குழந்தைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கிய உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகள் நல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

வைட்டமின்கள் அவசியம்

வைட்டமின் சத்து குறைபாடினால் குழந்தைகள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடினால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. எனவே வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள பச்சைக் காய்கறிகள், கேரட், மாம்பழம், பப்பாளி, மீன், ஈரல், முட்டையின் மஞ்சள் கரு, முருங்கைக்காய் போன்றவற்றை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கவேண்டும்.

வைட்டமின் பி 

குழந்தைகளுக்கு ஏற்படும் தோல், நரம்பு மண்டல பிரச்சினைகளை போக்க வைட்டமின் பி சத்து அவசியம். வைட்டமின் பி1, பி2, பி3, மேலும் பி6 போன்றவை அதிகம் உள்ள தானியங்கள், பச்சைக் காய்கறிகளை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்க வேண்டும்.

வைட்டமின் சி 

வைட்டமின் சி சத்து குழந்தைகளுக்கு ஏற்படும் காயங்களை ஆற்ற உதவுகிறது. இது தோலின் நலத்திற்கும், ஸ்கர்வி என்ற நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை, கொய்யா போன்ற உணவுப் பொருட்களில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. எனவே இதுபோன்ற பழங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

வைட்டமின் டி

குழந்தைகளுக்கு கால்சியம் சத்து கிடைக்கச் செய்வதில் வைட்டமின் டி சத்துக்கு முக்கிய பங்கு உண்டு. இது எலும்புகள் மற்றும் பற்களில் குறைபாடு ஏற்படுவதை தடுக்கிறது. இந்த வைட்டமின்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் உடம்பில் சூரிய ஒளி படச்செய்வதின் மூலமும் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

இரும்பு சத்து, தாது உப்புகள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு இரும்புச்சத்தும், தாது உப்புகளும் அவசியமாகும். இரும்புச்சத்தும், போலிக் அமிலமும் ரத்த சோகையை தடுக்க உதவும். எனவே தானியங்கள், பச்சை காய்கறிகள், இறைச்சி, முட்டை பால், ஈரல் போன்றவற்றை அதிகம் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

கால்சியம், பாஸ்பரஸ்

கால்சியமும், பாஸ்பரசும் உறுதியான பற்களுக்கும், எலும்புகளுக்கும் தேவையானதாகும். எனவே பால், பால் உணவுப் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது. தக்காளியில் கால்சியமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.

அயோடின், துத்தநாகம்

அயோடின் தாது உப்பு குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு ஏற்றது. அதேபோல் ஜிங்க் எனப்படும் துத்தநாக சத்து குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு ஏற்றது. இந்த சத்துக்கள் பால், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே இந்த வகை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது குழந்தை நல மருகள்த்துவர்களின் அறிவுரையாகும்