Home சமையல் குறிப்புகள் குடமிளகாய் சாதம்

குடமிளகாய் சாதம்

27

DSCN2905தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
குடமிளகாய் – 1
வெங்காயம் – 1
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு

வறுத்து பொடிக்க:

காய்ந்தமிளகாய் – 2
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
இலவங்கபட்டை – ஒரு சிறு துண்டு
கிராம்பு – 1

செய்முறை:

* வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆறியவுடன், மிக்சியில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

* அரிசியை குழையாமல், உதிரியாக வேக வைத்து கொள்ளவும். சாதத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் மேல் ஓரிரண்டு டீஸ்பூன் எண்ணெயை தெளிக்கவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* குடமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும்.

* பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிய பின் குடமிளகாய், உப்பு போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.

* கடைசியில் சாதத்தைப் போட்டுக் கிளறி, அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ளப் பொடியை அதன் மேல் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.