Home பாலியல் கான்டம் உபயோகிப்பது எப்படி என்பதற்க்கான ஏழு குறிப்புக்கள்

கான்டம் உபயோகிப்பது எப்படி என்பதற்க்கான ஏழு குறிப்புக்கள்

29

1. கான்டமை கவரிலிருந்து வெளியே எடுக்கும்பொழுது கவனம் தேவை. கவரை கிழிக்குகும் பொழுது, கான்டமையும் சேர்த்து கிழித்து விடவேண்டாம். கான்டமை அணிவதற்கு முன்பு அது தலைமாற்றி இல்லாமல், சரியாக இருக்கிறதா என்று பார்க்கவும்.

2. கான்டமை விரைப்பான ஆண்குறியின் நுனியில் வைத்து, அதன் முனையில் காற்று பபுள் இல்லாமல் அழுத்தி விடவும்.

3. மெல்ல கான்டமை ஆண்குறியின் அடிவரை பரப்பி விடவும். மீண்டும் ஒருமுறை கான்டமை, உங்கள் கைகளால் மெல்ல தடவி, காற்று பபுள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

4. கான்டம் உடையாமல் இருப்பதற்கும், சௌகரியமான உறவுக்கும், இன்பத்தை அதிகரிக்கவும் “லூப்ரிகன்ட்” கண்டிப்பாக தேவை.

5. உறவு கொள்ளும்பொழுது அவ்வப்பொழுது கான்டம் சரியான இடத்தில் இருக்கிறதா என்று உறுதி செய்யவும். கான்டம் உடைந்தோ, அவிழ்ந்தோ போயிருந்தால், உங்களால் எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம், பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தையோ அல்லது ஒரு டாக்டரையோ பார்ப்பது அவசியம்.

6. விந்து வெளியே வந்த பிறகு, ஆண்குறி விரைத்து இருக்கும்பொழுதே, கான்டமை கீழிருந்து மேலாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றும் பொழுது கான்டமோ அல்லது ஆண்குறியோ, உங்கள் துணையின் வாயிலோ, ஆசனவாயிலோ படாமல் பார்த்து கொள்ளவும்.

7. உபயோகபடுத்தப்பட்ட கான்டமை, நுனியில் முடித்துv போட்டு, குப்பைதொட்டியில் போடவும். அதற்கு பிறகு உங்கள் கைகளை நன்கு கழுவவும்.

செய்யக் கூடாதவை

கான்டமை சூடான இடங்களில் சேமிக்க கூடாது.
உபயோக நாள் கடந்த கான்டமை உபயோகப்படுத்த கூடாது.
உங்கள் நகங்களையோ, பற்களையோ கொண்டு கான்டம் கவரை கிழிக்க கூடாது.
ஆண்குறியில் போடுவதற்கு முன்பு கான்டமை அவிழ்க்க கூடாது.
எண்ணை, வாசிலின், அழகு க்ரீம், உங்கள் எச்சல் போன்றவற்றை “லூப்ரிகன்ட்”ஆக உபயோகிக்க கூடாது.
லூப்ரிகன்டை ஆண்குறியின் மீது தடவ வேண்டாம். அது கான்டம் எளிதாக நழுவ வழி செய்யும்.
ஒரு காண்டமை ஒரு தடவைக்கு மேல் உபயோகிக்க கூடாது.