Home உறவு-காதல் காதல் தோல்வியா?… அதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியவில்லையா?…

காதல் தோல்வியா?… அதிலிருந்து எப்படி மீள்வதென்று தெரியவில்லையா?…

29

லவ் பிரேக் – அப்பா? உடனே பசங்க தாடி வளர்த்துக்கிட்டு தண்ணி, தம்முன்னு சுத்தனும், பொண்ணுங்கனா சோகமா வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்து, அழுது தவிக்கணும். இதைத்தான் தமிழ் சினிமா நமக்குக் காலங்காலமாகக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மன நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது?

கல்வி, வேலை, திருமணம் என்பது போல காதலும் வாழ்க்கையில் நம்மைக் கடந்து போகிற ஒரு நிகழ்வு தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அது வெற்றியை நோக்கிப் பயணித்தால் திருமணத்திலும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் இடம் கொடுக்காமல் போனால் பிரேக் அப்பிலும் முடிகிறது என்ற எளிய உண்மையைப் புரிந்து கொண்டாலே போதும். பிரேக் அப் சோகத்திலிருந்து மிக விரைவில் வெளியேறிவிட முடியும்.

இந்த பிரேக் அப் சோகத்திலிருந்து உங்களை நீங்களே மீட்டுக் கொள்ள என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்?

கெட்டப் சேஞ்ச் என்றதும் பயந்துவிடாதீர்கள். உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும் வகையில் சில விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றை மாற்றிக் கொள்ளுங்கள். பிடித்தமான ஆடைகளை வாங்கி அணியுங்கள். உங்கள் வெளிப்புறத் தோற்றத்தில் நீங்கள் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள் கூட உங்கள் மனதை உற்சாகமாக மாற்றிவிடும். அவ்வப்போது கண்ணாடி பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் நீங்கள் ஹுரோ தான்.

நிகழ்ந்து முடிந்த பழைய விஷயங்களைத் தோண்டி ஆராய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சமும் யோசிக்காமல் உங்கள் முன்னால் காதலன்/காதலியை நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் உங்கள் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்து விடுங்கள்.

இதிலெல்லாம் நோ சென்டிமெண்ட்ஸ். காதலித்தபோது கிடைத்த பரிசுப் பொருட்களைத் தூக்கியெறிவது நல்லது. அதற்கு உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில், நீங்கள் அந்த மனநிலையிலிருந்து வெளியேறி பக்குவமடையும் வரையில், உங்கள் நம்பிக்கைக்குரிய யாரிடமாவது கொடுத்து வைத்திருங்கள்.

இதுவரை வாழ்ந்த ஒரு சிறிய பாதுகாப்பு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். இதுவரை செய்யத் தயங்கிய சில விஷயங்களை முயற்சித்துப் பாருங்கள். மிட்நைட் பார்ட்டி, பைக் ரைடிங் போன்ற உற்சாகமூட்டும் செயல்களில் ஈடுபடலாம்.

எல்லா வகையான காயத்துக்கும் பயணங்கள் சிறந்த ஆறுதலைத் தரும். அதனால் உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குத் தனியாகச் செல்லுங்கள். தனியாக இருக்கும்போது பழைய ஞாபகங்கள் வந்து எட்டிப்பார்க்கும் என்பது உண்மை தான். நீங்கள் செல்லும் இடத்தோடு மனதை ஒன்றி ரசியுங்கள். எதுவும் செய்யாமல் தனியே உட்கார்ந்து உங்களுக்கு முன்னால் செல்லும் ஒவ்வொரு மனிதர்களும் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பாருங்கள். அதுவே மிக அலாதியான கலை தான்.

ஜிம்முக்குப் போவது, அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை எடுத்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாலும் பழைய நினைவுகள் தொந்தரவு செய்யாமல் காத்துக் கொள்ள முடியும்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால் இன்னும் எளிமையாக பிரேக் அப் சோகத்திலிருந்து மீண்டுவிட முடியும். புத்தகத்தை விட உலகில் சிறந்த நண்பன் வேறு யாரும் இல்லை. புத்தகங்கள் உங்கள் சோகத்தையும் உங்களையும் சேர்த்து தனக்குள் மூழ்கடித்துவிடும்.