Home அந்தரங்கம் காதலை உற்சாகப்படுத்தும் தக்காளி, வெள்ளரிக்காய்!

காதலை உற்சாகப்படுத்தும் தக்காளி, வெள்ளரிக்காய்!

27

கொளுத்தும் கோடை வெயிலில் சில்லென்று எதையாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம்தான் ஏற்படும். இதில் காதலாவது? கத்தரிக்காயாவது? அடப் போங்கப்பா என்கிறீர்களா? காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும் சில உணவுகள் இருக்கிறது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இவற்றை உண்பதன் மூலம் கோடையிலும் உற்சாகம் அதிகரிக்கும் என்கின்றனர் அவர்கள்.

தக்காளி

தக்காளிக்கு காதல் ஆப்பிள் என்ற பெயரும் உண்டு. தக்காளியில் உள்ள சத்து ஆரோக்கியமான உயிரணுக்களை உற்பத்தி செய்கிறதாம்.இது சிறந்த செக்ஸ் ஊக்கியாக செயல்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே ஸ்ட்ராபெரீஸ், சீஸ் உடன் தக்காளி சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

புதினா காக்டெய்ல்

புதினா பானம் கோடையில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. இது காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தி, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடியது. தவிர புதினா வாயை புத்துணர்ச்சியாக்கக் கூடியது. இது பெண்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளரிக்காய்

ஜில்லென்ற காய்கறிகள் சாப்பிட்டால் கோடையில் உடலும் மனமும் குளுமையாகும். கோடையில் வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமானது. இது கோடையிலும் காதல் உணர்வுகளை உற்சாகப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

உருகும் சாக்லேட்

சாக்லேட் ஒரு உற்சாகமூட்டும் இனிப்பு. கொஞ்சம் டல்லாக உணரும் தருணங்களில் சாக்லேட் சாப்பிட்டால் அது ப்ரெஸ்சாக்குவதோடு உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும். உருகும் சாக்லேட் சாப்பிடுவதால் கோடை காலத்திலும் காதல் உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

தர்பூசணி

தர்பூசணிக்கு இந்தியன் வயாகரா என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் இந்தப் பழம் அதிகம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் காதல் உணர்வுகளை உற்சாகமடையச் செய்யும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.