Home சூடான செய்திகள் கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள்

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள்

32

57_images13திருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை.இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின்
பலவீனத்தால் இது நடைபெறுகிறது.

இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை

காட்டிலும் மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயலாகும்.

இது ஒன்றும் புதிதல்ல. நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்ற கூட உறவு ஆகும். இன்று இவற்றின் எண்ணிக்கை பன்மடங்காகி

விட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன.

இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன.முன்உ இதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டனர்.

இப்போது வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

கள்ளக்காதல் ஆபாசம் அசிங்கம் என்ற நிலைகளையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல்,

கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதால் என்ற

அளவிற்கு நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.

அரசனை நம்பி புருசனை விட்ட கதையாக பல பெண்களின் வாழ்வு பாழாகிப் போகின்றது. வழக்கம்போல் இதிலும் அதிக பாதிக்கப்படுவது பெண்களே!

அவமானம் தாங்க முடியாமல் இறுதியில் தற்கொலை செய்து கொள்வதால்.

எதுமறியா குழந்தைகள் அனாதைகளாகி நடுத்தெருவில் நிற்கின்றன.மக்களிடையே ஒழுக்க மாண்புகள் குறைந்து போனதே இதற்குக் காரணம் என்று

ஒற்றை வரியில் இந்தப் பிரச்சனையை அடக்கிவிட முடியாது.

பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. பணப்பெருத்தமும், ஜாதகப் பொருத்தம்,குடும்பப்பொருத்தம், ஜாதி, குல, கோத்திரப்

பொருத்தம் பார்க்கின்றார்கள் ஆனால் மனப் பொருத்தம் பார்க்க தவறிவிடுகின்றனார்.

படிப்பு,அறிவு,அழகு, பொழுதுபோக்கு,வேலைக்குச் செல்லுதல், நம்பிக்கை,கொள்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்கள் மணம் முடிக்க

இருப்பவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை கவனிக்கத் தவறி விட்டனர்.

இதன் விளைவு இவர்கள் வாழ்வில் மோதல்களும், சண்டைகளும்! இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச்

செல்கின்றர்கள்.

அப்டிப்பு, பதவி, வருமானம், திறமை,நோய்கள் ஆகியவற்றை மறைத்து தவறான தகவல்களைத் தந்து முடிக்கப்பட்ட திருமணங்களும்

சண்டை,சாச்சரவில் முடிகின்றன. இத்தகைய திருமணம் விவாகரத்தில் முடியாலம் அல்லது கள்ள உறவிற்கு இட்டுச் செல்லலாம்.

வறுமையும் பொருளாதார ஸ்திரத்தன்மையும் இல்லாத குடும்பங்களும் இத்தகைய தவறுக்கு ஆளாகின்றன.குடிகாரக் கணவன், வேலைக்குச்

செல்லாத ஊதாரிக் கணவன் இவர்களால் ஏற்படும் நெருக்கடிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருதுணையிடம் செல்கின்றனர்.

தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.

அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர்.