Home பாலியல் கள்ளக் காதலால் ஏற்படும் உடல் பாதிப்புக்கள்

கள்ளக் காதலால் ஏற்படும் உடல் பாதிப்புக்கள்

38

25-sex-asaivam1s-300கள்ளக்காதலால் பலரின் இதயங்கள்தான் நொறுங்கும் என்பதில்லை, அதில் ஈடுபடும் ஆண்களுக்கும் ஒரு முக்கியப் பாதிப்பு ஏற்படுகிறதாம். ஒரு ஆய்வு இப்படிக் கூறுகிறது.

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்களுக்கு, அவர்களின் ஆணுறுப்பு பெரும் பாதிப்பை சந்திப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

திருமணத்தைத் தாண்டிய முறையற்ற உறவுகள், கள்ளக்காதல், பல பெண்களுடன் உறவு கொள்வது போன்றவற்றில் ஈடுபடும் ஆண்களுக்கு ஆணுறுப்பு சேதம் அடைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்த ஆய்வை அமெரிக்காவின் மேரிலான்ட் மருத்துவ மையத்தின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கிராமர் தலைமையிலான குழு மேற்கொண்டது. இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ” முறையற்ற வகையி்ல உறவுகளில் ஈடுபடும் ஆண்களுக்கு அவர்களது ஆணுறுப்பு சேதம் அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிடைக்கிற இடத்தில் செக்ஸ் உறவை வைத்துக் கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். வேலை பார்க்கும் இடம், கழிப்பறை, பாத்ரூம், கார் உள்ளிட்ட பொருத்தமற்ற இடங்களில் அவசரம் அவசரமாக உறவு கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் இவர்கள். இப்படிப்பட்டவர்கள் நிதானமாக, எந்தவித அச்சமும் நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. இப்படிட்ட நிலையில் உறவு கொள்வதால் ஆணுறுப்பு சேதமடையும் வாய்ப்பு அதிகம்.

வேகம் வேகமான உறவு, தவறான முறைகளைக் கையாளுவது, அவசர கதியில் இயங்குவது, தவறான பொசிஷன்களை கடைப்பிடிப்பது ஆகியவை காரணமாக இவர்களது ஆணுறுப்புகளுக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது.

எங்களது ஆய்வில் 16 பேரை நாங்கள் ஆய்வுக்குட்படுத்தினோம். இவர்களுக்கு ஆணுறுப்பில் காயம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. அந்த ஆய்வின்போதுதான் முறையற்ற வகையில் உறவு கொண்டதால் இந்த காயங்களை அவர்கள் சந்தித்தது தெரிய வந்தது.

மேலும் எங்களது ஆய்வுக்கு வந்திருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முறையற்ற, கள்ளத்தனமான உறவுகளை மேற்கொண்டிருந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. இவர்களில் சிலர் ‘லிப்ட்’டில் கூட உறவு கொள்ளும் பழக்கமுடையவர்கள் என்பது தெரிய வந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்”

மனைவியருடன் வாழ்ந்து வரும் ஆண்கள் உறவு கொள்ளும்போது ஏற்படுவதை விட பல மடங்கு மன அழுத்தம், பயம், பீதி, அவசரம் உள்ளிட்டவற்றை கள்ளக் காதலில் ஈடுபட்டுள்ள ஆண்கள் சந்திக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.