Home ஜல்சா கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டி சித்ரவதை: திருநங்கைகள் உள்பட 4 பேர் கைது

கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டி சித்ரவதை: திருநங்கைகள் உள்பட 4 பேர் கைது

36

31793-300x160பெங்களூரு,

திருநங்கையாக மாற்ற கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டி சித்ரவதை செய்ததாக திருநங்கைகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் மாயம்

பெங்களூரு புலிகேசி நகர் அருகே வசித்து வருபவர் ரவி(வயது 18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.யூ. கல்லூரி மாணவர். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமானார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிலும், நண்பர்களின் வீட்டிலும் ரவியின் பெற்றோர் தேடிப்பார்த்தனர்.

ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் தனது மகன் மாயமானதாக கூறி புலிகேசி நகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சிக்பள்ளாப்பூரில் இருந்த ரவியை போலீசார் மீட்டனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கடத்தி மர்ம உறுப்பை வெட்டினர்

அதாவது, பெங்களூருவில் இருந்து ரவியை சிக்பள்ளாப்பூருக்கு திருநங்கைகள் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், ஒரு அறையில் அவரை அடைத்து வைத்து அவருடைய மர்ம உறுப்பை வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. திருநங்கைகள் எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை சூடாக்கி மர்ம உறுப்பை வெட்டிய இடத்தில் ஊற்றி அவரை சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அவரை கழிவறை சுத்தம் செய்யும் பணியில் திருநங்கைகள் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரவி சிக்பள்ளாப்பூரில் இருப்பதை அறிந்த புலிகேசி நகர் போலீசார் அங்கு சென்று ரவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே, ரவியை போலீசார் மீட்டுள்ளதை அறிந்த திருநங்கைகள் தலைமறைவாகி விட்டனர். மேலும், சிவாஜி நகரில் வசித்து வரும் அர்ச்சகர் துளசியப்பன் என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரும் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் கைது

இதையடுத்து, புலிகேசி நகர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும், உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் திருநங்கைகள் மற்றும் அர்ச்சகர் துளசியப்பன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் நேற்று காலையில் தனது நண்பர்களின் வீட்டில் பதுங்கி இருந்த துளசியப்பன், திருநங்கைகள் ஆனந்தி, ஐசு, ஸ்ரேயா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என கருதப்படுகிறது.

மேலும் சிலரிடம் விசாரணை

மேலும், இவர்கள் வேறு சில சிறுவர்களையும் கடத்தி சென்று திருநங்கைகளாக மாற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.