Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்

கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்

25

பெயரைக் கேட்டாலே பீதி கிளம்புகிறதல்லவா? கர்ப்பப் பை பிளவு படும் என்கிற தகவலே பலருக்கும் புதிதாக இருக்கும் நேரத்தில், அது எப்போது, எப்படி, எதற்கெல்லாம் பிளவு படலாம், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணங்கள்

‘‘கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு பல்வேறு காரணங்களினால் கர்ப்பப் பையானது பிளவுபடும் வாய்ப்புகள் அதிகம். பிரசவ வலி வரும் போதும் கர்ப்பப் பை பிளவு பட்டு, குழந்தை வெளியே வரக்கூடும். இது தாய், குழந்தை என இருவருக்குமே ஆபத்தானது.சில பெண்களுக்கு முதல் பிரசவம் சிசேரியனாக இருந்திருக்கும். அடுத்ததும் சிசேரியனாகவே இருக்கும் என்கிற நிலையில், சிலர் வேண்டுமென்றே சுகப்பிரசவத்துக்காக காத்திருப்பதுண்டு. அவர்களுக்கு வலி வரும் போது, முதலில் செய்த சிசேயரியன் தழும்பானது விரிவடைந்து, கர்ப்பப் பை பிளவு படலாம்.

கர்ப்ப்பையில் கோளாறுகள் இருப்பவர்களுக்கும், இரட்டை கர்ப்பப் பை உள்ளவர்களுக்கும்கூட இது சகஜம். நஞ்சுக் கொடியானது கர்ப்பப் பையின் உள்ளேயே புதைந்துபோய், முதலில் செய்த சிசேரியன் தழும்பானது பலவீனமடைந்து, அதன் தொடர்ச்சியாக அடுத்த பிரசவத்தின் போது, கர்ப்பப் பை பிளவு ஏற்படலாம். அடிக்கடி டி அண்ட் சி செய்தவர்களுக்கும், அதன் ஒரு விளைவாக கர்ப்பப் பை பிளவு உண்டாகலாம். சுகப்பிரசவத்திலும்கூட, ஆயுதம் போட வேண்டிய தேவை ஏற்படுகிற போது சில நேரங்களில் கர்ப்பப் பை பிளவு நிகழலாம்.

கர்ப்பப் பையில் வேறு ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, அது சரியாகக் கையாளப்படாத பட்சத்தில், அந்தப் பெண்கள் கருத்தரிக்கும் போது கர்ப்பப் பை பிளவுக்கான அபாயங்கள் அதிகம்.ஏற்கனவே சொன்ன மாதிரி முதலில் சிசேரியன் செய்ததன் விளைவாக, குழந்தையை வெளியே எடுக்க வெட்டப்பட்ட அந்தப் பகுதியில் அடுத்த பிரசவத்தின் போது பிளவு ஏற்படுவது சகஜம். சுகப்பிரசவத்திலும்கூட கர்ப்பப் பை பிளவுக்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது, சிலருக்கு பிரசவ வலி வந்திருக்கும். அழுத்தம் அதிகமாகியிருக்கும்.

ஆனாலும், கர்ப்பப் பையின் வாய் திறக்காமலிருக்கும். அப்போது கர்ப்பப் பையின் மேல் ஓரம் மற்றும் பக்க வாட்டுப் பகுதிகளில் பிளவு ஏற்படலாம். எனவே சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தாமாக முடிவு பண்ணாமல், தனக்கு சிகிச்சையளிக்கிற மருத்துவரின் பொறுப்பில் விட்டு விடுவதே பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற வலியை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவருக்கு சந்தேகம் வந்தால், சுகப்பிரசவத்துக்காக காத்திருக்கச் செய்யாமல், உடனே சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுப்பதற்கான முயற்சிகளை அவசரமாகச் செய்வார். தாய், குழந்தை என இரண்டு உயிர்களும் காப்பாற்றப்படும். – See more at: http://election.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2610&cat=500#sthash.nXkoAVGJ.dpuf