Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?..

கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?..

24

கர்ப்பமாக இருக்கும்பொழுது முதல் 4 நான்கு மாதங்களுக்கு வாந்தி, குமட்டல் ஆகியவை உண்டாவது இயற்கை தான். ஆனால் இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும்.

சிலருக்குக் குமட்டல் நாள் முழுவதும்கூட தொடரும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் தான் ஏற்படும். இந்த கர்ப்ப காலத்தில் உண்டாகும் குமட்டலில் கூட, ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சரி. இந்த கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை எப்படி சமாளிக்கலாம்?… எப்படி குறைக்க முடியும்?…

தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதிலாக, அதை கொஞசம் கொஞ்சமாக, ஆறு வேளைகளில் சாப்பிடும்படி மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய சின்னச்சின்ன மாற்றங்களின் மூலம் மசக்கையை எளிதாகச் சமாளிக்கலாம்.

காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.

குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிர்ப்பது நல்லது. உடலுக்கு ஆரோக்கியமான, அசளகரியமில்லாத உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால் அது அதிகமாகும். அந்த சிந்தனைக்கே போகாமல், முடிந்தவரையிலும் வாந்தி வரும் என்பது போன்ற நினைப்பைத் தவிர்த்திடுங்கள்.

அடிக்கடி வாந்தி வருவதால், உடலில் நீர்ச்சத்தும் எலக்ட்ரோலைட்டும் குறைவாகும் வாய்ப்பு அதிகம். அதனால் குமட்டலும் வாந்தியும் அளவுக்கு அதிகமாக உண்டானால், மருத்துவரிடம் சென்று ஆலோசித்து ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.