Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன?

கர்ப்ப காலத்தில் தினமும் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன?

39

கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க வேண்டும். எனவே இப்போது பழங்களில் எந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம்

அவகேடா

ஃபோலிக் அமிலம் அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் அவகேடாவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

மாம்பழம்

இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ அல்லது சி அதிகம் உள்ளது.

திராட்சை

நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் சமிபாட்டின் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி – ஆக்சிடண்ட் கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல் (NAUSEA), காலை அசௌகரியம் (MORNING SICKNESS), செரிமான பிரச்சனை போன்றவற்றையும் சரிசெய்யும்.

வாழைப்பழம்

கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழம், கர்ப்பிணிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆரஞ்சுப் பழத்திலும் அதிக அளவில் வைட்டமின்களும் மற்றும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாக பிறக்கும்.

ஆப்பிள்

வைட்டமின் ஏ நிறைந்துள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.

பேரிக்காய்

பேரிக்காயில் குறைந்த அளவில் கிளைசமிக் இருப்பதால், கர்ப்பிணிகள் இந்த பழத்தையும் சாப்பிடலாம்