Home குழந்தை நலம் கர்ப்பிணிப் பெண்கள் இரண்டு கப் கோப்பி குடித்தால் குழந்தைக்கு இரத்தப் புற்று நோய் ஏற்படும் அபாயம்!

கர்ப்பிணிப் பெண்கள் இரண்டு கப் கோப்பி குடித்தால் குழந்தைக்கு இரத்தப் புற்று நோய் ஏற்படும் அபாயம்!

28

கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப் கோப்பி குடிப்பது குழந்தைக்கு லுகேமியா (இரத்த புற்றுநோய்) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் அதிகமாக 60 சதவீதம் வரை பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மகப்பேறியல் நாளிதழில் இந்த ஆய்வு குறித்தான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நடத்திய கல்வியாளர்கள் மற்றும் அரசு கர்ப்பிணி பெண்கள் கோப்பி குடிப்பதை குறித்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதை முற்றும் தவிர்க்க கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் கோப்பி நச்சு கரு செல்களில் டி.என்.ஏ. மாறறத்தை ஏற்படுத்தலாம் என்றும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நினைக்கின்றனர்.

ஏற்கனவே நடத்தப்பட்ட 20 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணியாக இருக்கும்போது ஒரு பெண் 2 கோப்பி குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுளனர்.

20 சதவீதம் லுகேமியா பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர். கர்ப்பிணியாக இருக்கும் பெண் ஒருவர் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் கோப்பி குடித்தால் குழந்தை 60 சதவீத லுகேமியா பாதிப்பை சந்திக்க நேரிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் 4 கப்பிற்கு மேல் கோப்பி குடித்தால் குழந்தைகளுக்கான பாதிப்பு 72 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வருடத்திற்கு சுமார் 500 குழந்தைகள் லுகேமியாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் இது மிகவும் பொதுவான குழந்தை பருவத்தில் உள்ள புற்றுநோய் என்று தெரிவிக்கப்பட்டுளது.

அதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து கீமோதெரபி மூலம் சிகிச்சை அளித்தால் 80 சதவீதம் குணப்படுத்திவிடலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்ப காலங்களில் கோப்பியை குறைத்து கொள்வது நல்லது என்றே ஆய்வில் பங்குகொள்ளாத பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மனித கதிர்வீச்சு விளைவுகள் ஓய்வுபெற்ற பேராசிரியரான டெனிஸ் ஹென்சாவ் தெரிவித்துள்ளார்.