Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

35

Captureகர்ப்ப காலத்தில் உடல் மற்றும் மன ரீதியாக நிறைய மாற்றங்களை பெண்கள் எதிர்கொள்ள வேண்டும். அதோடு அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகாமல் பாதுகாப்பாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஒவ்வொரு தாயின் கடமையாகும். பெண்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது என சொல்வார்கள்.

உணவு விஷயத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவுகள் வயிற்றில் உள்ள சிசுவை சென்றடையும். நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத போது அதன் பாதிப்பு வயிற்றில் இருக்கும் சிசுவை தாக்கும். எனவே நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும்.

கர்ப்பிணிகள் மீன் சாப்பிடக் கூடாது. இதிலுள்ள சில சத்துக்கள் விஷத்தை உருவாக்கும். அதிக சூட்டை தரும், சரும அலர்ஜியை உண்டாக்கும்” என்று சொல்லி கேட்டிருப்பீர்கள்.

மீனில் உள்ள ஒமேகா மற்றும் பல அருமையான சத்துக்கள் கருவின் மூளை வளர்ச்சியை தூண்டுகிறது. டனா, ஷார்க் போன்ற மீன்கள் அதிக மெர்குரி கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிடக் கூடாது. ஆனால் ஆற்று மீன், சாலமன் நெத்திலி மீன் ஆகியவை சாப்பிடலாம். குறைந்த அளவு சாப்பிடுவதால் எந்த வித பாதிப்பும் உண்டாகாது.

கர்ப்பிணிகள் கடல்வாழ் உயிரினங்களை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். எனவே மீன் போன்றவற்றை கர்ப்பிணிகள் தவிர்த்து விடுவது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.