Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாற்றங்கள்!!

17

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மட்டும் தான் மாற்றம் ஏற்படும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் சருமத்திலும் பல மாறுதல்கள் ஏற்படும். இதற்கு காரணம் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு தான். மேலும் நிபுணர்களும், கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு நாள் நன்கு பொலிவாகவும், மறுநாள் பொலிவிழந்தும் காணப்படும் என்று சொல்கின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய மாறுதல்கள் அனைத்து பெண்களுக்கும் நிச்சயம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஒருசிலருக்கு இத்தகைய மாறுதல்கள் ஏற்படலாம். மேலும் ஒருசிலவற்றை அனைத்து கர்ப்பிணிகளும் சந்திப்பார்கள். இப்போது அப்படி கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படக்கூடிய சரும மாறுதல்களைப் பார்ப்போமா!!