Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பத்தின் போது மலச்சிக்கல் – காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு

கர்ப்பத்தின் போது மலச்சிக்கல் – காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை மற்றும் தடுப்பு

43

அடிவயிற்றில் வலி, கெட்டியான மலம் மலக்குடல் வழியாக செல்வது, அதிக இடைவெளியில் மலம் கழிப்பது போன்றவை மலச்சிக்கலை உணர்த்தும் அடையாளங்களாகும். கிட்டத்தட்ட கர்ப்பிணிகளில் சரிபாதியினருக்கு, ஏதேனும் ஒரு கட்டத்தில் மலச்சிக்கல் உண்டாகும்.

கர்ப்பத்தின் தொடக்க காலத்திலேயே தோன்றும் குமட்டல், சாப்பிடுவதற்கான உந்துதல், திடீர் மனநிலை மாற்றங்கள், தலைச்சுற்றல் போன்றவற்றுடன் மலச்சிக்கலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்திலேயே வரும் ஓர் அறிகுறியாகும்.

இந்தியாவில் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கர்ப்பிணிகளில் சுமார் 53% பேருக்கு மலச்சிக்கல் உள்ளது.

காரணங்கள் (Causes)

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வயிற்றிலும் குடலிலும் ஏற்படும் உடற்கூறியல் மற்றும் உடலியல் மாற்றங்களின் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கர்ப்பத்தின்போது புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதால் செரிமானத்தின் வேகம் குறைகிறது, இதனால் உணவு குடலில் பயணிக்கும் காலம் அதிகரிக்கிறது, இதனால் மலச்சிக்கல் உண்டாகிறது.

மலச்சிக்கல் உண்டாகக் காரணமாக இருப்பவை:

மனக் கலக்கம்
கவலை
குறைந்த நார்ச்சத்துள்ள உணவுப் பழக்கம்
உடலுழைப்பு குறைவாக இருப்பது
அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்வது
இவை மட்டுமின்றி, வளரும் கரு குடலை அழுத்துவதாலும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

அறிகுறிகள் (Symptoms)

மலச்சிக்கலின் சில அறிகுறிகள்:

வாரத்தில் 3க்கும் குறைவான முறை மலம் கழிப்பது
மலம் கெட்டியாகிவிடுவதால், அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பது
அரிதாக சில சமயம் ஆசனவாயில் இருந்து இரத்தம் கசிதல்
அடிவயிற்றில் உப்புசம்
தசைப்பிடிப்பு அல்லது வலி
சிகிச்சை (Treatment)

பெரும்பாலானோர்க்கு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுடன் திரவ ஆகாரங்களையும் நார்ச்சத்துள்ள உணவுகளையும் எடுத்துக்கொள்வதே இந்தப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கொடுக்கும். நீண்ட நாள் உடலுழைப்பின்றி இருந்திருந்தால், தொடர்ந்து நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும்.

புரோபயாட்டிக் பானங்களும் மலக்குடல் செயல்பாட்டை மேம்படுத்தக்கூடும். இவற்றால் பலன் கிடைக்காவிட்டால், லாக்சாட்டிவ் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். மருத்துவர் மலமிளக்கி மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இரும்புச்சத்து மருந்துகளைப் பற்றி மருத்துவரிடம் கூறி ஆலோசனை கேட்கவும். ஒரே நாளில் அதிக டோஸ் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, ஒரே நாளில் சில முறைகளில் சிறு சிறு டோசாக இரும்புச்சத்து மருந்துகளை எடுத்துக்கொள்ள உங்கள் மருத்துவர் அறிவுறுத்தக்கூடும். இதன் மூலம், அளவுக்கு அதிகமான இரும்புச்சத்தினால் ஏற்படும் மலச்சிக்கல் தவிர்க்கப்படும்.

மலச்சிக்கலுக்காக கடைகளில் ஏதேனும் மருந்துகள் அல்லது லாக்சாட்டிவ் மருந்துகளைவாங்கிப் பயன்படுத்தும் முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து செயல்படவும்.

கர்ப்பத்தின்போது மலச்சிக்கலை எப்படித் தவிர்ப்பது? (How to prevent constipation during pregnancy?)

வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனையை சமாளிக்கலாம், வராமலும் தடுக்கலாம். அவற்றில் சில:

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்: முழு தானியங்களால் ஆன ப்ரெட், தவிடு, ப்ரூன்ஸ், காய்கறிகள், பழங்கள், ப்ரேக்ஃபாஸ்ட் செரல் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும்.
அதிக நீர் அருந்த வேண்டும்: உடலில் போதுமான அளவு நீர் இருந்தால், மலம் இளகி, மலக்குடல் நன்கு வேலை செய்ய உதவியாகும். அதிகம் நீர் அருந்துவதும் பழச்சாறு அருந்துவதும் இதற்கு உதவும்.
உடற்பயிற்சி: தினசரி ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். கர்ப்பத்தின்போது மலச்சிக்கல் ஏற்படுவதை இந்த நடவடிக்கைகள் தடுக்க உதவக்கூடும்!