Home பெண்கள் தாய்மை நலம் “கர்ப்பக் காலத்தில் உணவின் ஊட்டச்சத்து”

“கர்ப்பக் காலத்தில் உணவின் ஊட்டச்சத்து”

25

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சிறந்த ஊட்டச்சத்து…மாத்திரை அல்லாது நாம் உண்ணும் உணவிலே இருக்கும் ஊடச்சத்தினை பற்றி கொஞ்சம் அலசுவோம். முக்கியமாக கர்பக் காலத்தில் தேவைப்படும் உணவுகளில் காணப்படும் சத்துக்கள் .

போலிக் அமிலம் (FOLIC ACID) : ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் அவளுக்குக் கண்டிப்பாக 800 மில்லிகிராம் அளவு போலிக் அமிலம் தேவைப் படுகிறது. இது பொதுவாக ஆறு கப் அளவிலான அரணான தானியங்கள் உண்டால் கிடைக்கும். அல்லது மூன்று கப் வேகவைத்த பசலைக்கீரையில் கிடைக்கும் .இதில் ஏதேனும் ஒன்றை தினம்தோறும் கர்ப்பக் காலம் முழுவதும் உண்டால் மிக நல்லது.

கால்சியம் (CALCIUM) : ஒரு நாளைக்கு குறைந்தது 1000 மில்லிகிராம் அளவு கால்சியம் தேவை. கர்ப்பிணித் தாயின் எலும்பில் இருந்துக் குழந்தை தனக்குத் தேவையானக் கால்சியம் சத்துக்களை எடுத்துக் கொள்வதினால் அவசியம் கால்சியம் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று கப் பால் அருந்தினால் போதுமானது.

இரும்பு சத்து (IRON) : கர்பிணிப் பெண் நான்காம் மாதத்தை நெருங்கும் போது 50 சதவிகிதம் ரத்தம் அதிகமாகிறது. அதற்குக் குறைந்தது 27 மில்லிகிராம் அளவு இரும்பு சத்துத் தேவை. இது 7 கப் அளவு கிட்னி பீன்ஸ் சாபிட்டால் போதுமானது.

வைட்டமின்-டி (VITAMIN-D ) : ஒரு நாளைக்கு குறைந்தது 600 ஐயு அளவுக்கு தேவைப் படுகிறது. வைட்டமின் டி யும் கர்ப்பக் காலம் முழுவதும் தேவைப்படுகிறது. பதிமூன்று முட்டைகளில் இத்தனை அளவு சத்துக்கள் இருக்கிறது.

காலையில் சிறுது நேரம் சூரியன் முன் நின்றாலும் நல்லது.. மருத்துவரை அணுகினால் மாத்திரை வடிவில் தரும் சத்துக்கள் நாம் உண்ணும் உணவிலேயே கிடைக்கிறது. உண்ணும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துகளினால் பக்க விளைவுகள் இல்லை என்பது மகிழ்வான விஷயம் .