Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் பின் உடலுறவு கொள்கிறீர்களா?

கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் பின் உடலுறவு கொள்கிறீர்களா?

26

தாம்பத்தியம் என்பது ஒரு அற்புதமான செயலாகும். இது தம்பதிகள் அவர்களின் உணர்ச்சிகளை வளர்த்து கொள்ளவும், அவர்கள் காதல் வாழ்கை மீண்டும் மலர்ந்து மணம் வீசவும் செய்யும். நீங்கள் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் போது அல்லது ஒரு குழந்தையை பெற்றிருக்கும் போது உங்களது உடலுறவை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்.

உங்கள் குழந்தை வாழ்வில் வந்த உடன் உங்களது மொத்த வாழ்க்கையும் மாறி இருக்கும். உங்களது தாம்பத்திய வாழ்க்கையிலிருந்து அது உங்களை விலக்கி வைத்திருக்கும். உங்களுக்கும் கணவருக்கும் இடையில் இடைவெளி அதிகரித்திருப்பதை உணர்வீர்கள்.

கர்ப்பகாலத்தில் ஏன் உடலுறவு கொள்ளக் கூடாது?

1 இது கருச்சிதைவு ஏற்படும் அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

2 குறைமாத பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3 இதனால் இரத்தப்போக்கு ஏற்படலாம். வலியுடன் கூடிய உடல் பிடிப்புகள் மற்றும் அதிக வெளியேற்றங்களை ஏற்படுத்தும்.

4 உங்களுக்கு அமினோட்டிக் சவ்வு கிழிந்து விடுமோ அல்லது பாதிக்கபடுமோ என்கிற பயம் ஏற்படும்.

5 உங்களது நஞ்சு கொடி கருப்பையில் மிகவும் கீழே இருக்கலாம்.

6 உங்கள் மருத்துவர் உடலுறவிலிருந்து உங்களை விலகி இருக்க சொன்னால், நீங்கள் விலகி விடுவது சிறந்தது. உங்களுக்கு அது போன்ற எண்ணங்கள் தோன்றினால், தூங்க சென்று விடுங்கள்.

7 இது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கலாம்.

8 உங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் அனைத்தையும், நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்கள் குழந்தை பிறந்த பிறகு அனைத்தும் சரியாகி விடும், உங்கள் கணவருடனான நெருக்கம் அதிகரித்து விடும்.

ஆனால் எப்போதும் எல்லா பெண்களுக்கும் ஒரே ஆசைகள் இல்லை. சிலருக்கு, அது ஒரு பயங்கரமான பணியாகவும், கட்டாயமாகவும் செயல்பட வேண்டும். நீங்கள் இப்போது ஒரு குழந்தைக்கு தாய் என்பதால் கவனத்தோடு செயல் பட வேண்டும்.

பிரசவத்தின் பின்னான உடலுறவில் ஏற்படும் அனுபவங்கள்

பிரசவத்தின் பின், உடலுறவிற்கென குறிப்பிட்ட எந்தவிதி முறையையும் நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இப்போது நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் தயாராகி இருப்பீர்கள்.

1 குழந்தை பிறக்கும் போது பிறப்புறுப்பில் அறுவை சிகிக்சை செய்யப்பட்ட பெண்கள், ஒரு மாதம் அல்லது 6 வாரங்களுக்கு பிறகு உடலுறவில் ஈடுபடலாம். இது மிக மென்மையான பகுதி மற்றும் இந்த காயத்திலிருந்து மீண்டு வர சிறிது காலம் எடுக்கும்.

2 நீங்கள் அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றிருந்தால், உங்களது அடிவயிற்று காயங்களை ஆற விட வேண்டும். அங்கு அதிக அழுத்தத்தை கொடுக்க கூடாது.

3 குழந்தை பிறந்த பிறகு 6 முதல் 8 வாரங்களுக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு ஏற்படும், இதை பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைய தேவையில்லை.

4 இது உங்களை மகிமை பட செய்யக் கூடிய மற்றும் பெருமைக்குரிய ஒன்று. குழந்தையை வைத்திருப்பதால், நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்வீர்கள்.

5 உங்களது நாளில் 98% நேரத்தை உங்கள் குழந்தை எடுத்துக் கொள்ளும். நீங்களும் அவர்களுக்கு நேரம் செலவிடவே விரும்புவீர்கள். உங்கள் படுக்கையில் உறங்க மட்டுமே நேரம் கிடைக்கும்.

6 உங்களது மார்பக காம்புகளிலும், மார்பகங்களிலும் இருக்கும் புண் போன்றவை பிரசவத்தின் பின் வலியுடன் கூடிய வேதனையை கொடுக்கும்.

7 உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்க மாற்றங்கள், உங்களுக்கு அதிக மன அழுத்தத்துடன் கண்ணீரை ஏற்படுத்தலாம். ஆனால், உங்கள் குழந்தைக்காக எனும் போது அனைத்தும் மறைந்து காணாமல் போய்விடும்.

8 பிரசவத்தின் பின் உங்களது எதிரியாக இருக்க போவது, ஹார்மோனால் மாறிக் கொண்டே இருக்கும் மனநிலை தான். இது உங்களை கோபத்திற்கும், கவலைக்கும் மற்றும் எதிலும் ஈடுபாடில்லாமல் எரிச்சலடையும் மன நிலைக்கும் ஆளாக்கும்.

உங்கள் கணவர் உங்களின் நிலை கண்டு கவலையடையலாம். உங்களது தாம்பத்திய வாழ்கை சில மாதங்களுக்கு கனவாக மாறி இருக்கும். ஆனால், அது உயிர்த்தெழும் நாளில் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது.