Home பெண்கள் தாய்மை நலம் கருத்தரிப்பு சோதனை செய்யும்போது பெண்கள் எப்படி உணர்கிறார்கள்?

கருத்தரிப்பு சோதனை செய்யும்போது பெண்கள் எப்படி உணர்கிறார்கள்?

31

பெண்கள் கர்ப்பம் தரித்த நொடி முதல் ஏகப்பட்ட உணர்ச்சிகளுக்கும், மாற்றங்களுக்கும் உள்ளாவார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் பெண்களுக்கு அதிகப்படியான பரிசோதனைகளும் செய்யப்படும்.

அப்போது ஒவ்வொரு முறை வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் பற்றியும் பரிசோதனை செய்யப்படும்போது பெண் என்ன மாதிரி உணர்க்றாள் என்று உங்களுக்குத் தெரியுமா?… தெரிந்துகொள்ள வேண்டுமா?…

கர்ப்பகாலத்தில் நிகழும் முதல் பரிசோதனையில் கருவில் வளரும் குழந்தை உருவை, பார்க்க நேரிடும் போது, ஹைய்யா என் குழந்தை என்று பெண்ணின் மனது குதூகலிக்கிறது.

கருத்தரிப்பு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிற போது அந்த வானத்தையே எட்டிப் பிடிக்கும் அளவு ஆனந்தம் கொள்கிறாள் பெண்மணி..

தான் சாப்பிடும் உணவால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று எல்லா உணவுகளிலும் ஆரோக்கியத்தை கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

பிறப்புறுப்பில் இருக்கும் சிறுதுளை மூலம், என் குழந்தை எப்படி வெளியே வரும்..? அந்த சமயம் எனக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்று பெண்ணின் மனது பயம் கலந்த வியப்பை நோக்கி விரிந்து செல்லும்.

குழந்தைக்கு எங்களின் நல்ல குணம் கொண்ட ஜீன்கள் போய் சேருமா? குழந்தை வயிற்றுக்குள் சரியாக வளர்கிறதா? இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்? போன்ற கேள்விகள் பெண்ணின் மூளையைக் குடையும்.

நான் கருத்தரிப்பதை எப்படி கணவரிடமும் உறவுகளிடமும் கூறுவது? கூறியவுடன் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணி ஆனந்தம் கொள்வாள்…

அதேபோல் தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கும்.

இதுபோன்று பத்து மாதம் முடிந்து குழந்தை பிறக்கும்வரையிலும் பெண் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி ஒவ்வொரு நொடியும் ஏதாவது சிந்தித்துக் கொண்டேதான் இருப்பாள்.