Home அந்தரங்கம் கசமுசா போன் கால், காதில் கேட்க முடியாது! ஆனால் அதன் மதிப்பு பதினைந்து லட்சமாம்! எப்படியெல்லாம்...

கசமுசா போன் கால், காதில் கேட்க முடியாது! ஆனால் அதன் மதிப்பு பதினைந்து லட்சமாம்! எப்படியெல்லாம் சம்பாதிக்குது இந்த பொண்ணு!

141

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பெரும் நடிகர்களை சீண்டி பார்க்கும் நடிகை பற்றி ஒரு பரபரப்பு தகவல். இதை கேள்விப்பட்டால், சம்பாதிக்க இவ்வளவு சுலபமான வழிகள் இருக்கிறதா என கண்டிப்பாக பிரம்மிப்பீர்கள். அவனவன் ஆயிர ரூபாய் சம்பாதிக்கவே கண் விழி பிதுங்குகிறது, ஆனால் பிரபல நடிகை ப் ளாக் மெயில் மூலம் ஒரே போன் காலில் பதினைந்து லட்சம் சம்பாதித்துள்ளார். யார் அந்த நடிகை என யூகித்து விட்டீர்களா? மிக பிரபலமான நடிகை, படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும், முன்னணி பிரபலங்களை வம்பிற்கு இழுத்தே பிரபலமாகிவிட்டார்.

ஆரம்பத்தில் இவர் நடிக்க வந்த காலத்தில் சான்ஸ் தேடி அலைந்த போது, சில இயக்குனர்கள் போன் வாயிலாக இவருடன் மிக நெருக்கமாக பேசியுள்ளனர். அதையெல்லாம் அப்போதே ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்ட இந்த நடிகை, இப்போது அந்த குறிப்பிட்ட இயக்குனர்களிடம் இந்த போன் பதிவுகளை காட்டி அவர்களை கதிகலங்க வைத்துள்ளார்.

இந்த ப் ளாக் மெயிலில் மாட்டிக்கொண்ட இளம் இயக்குனர், அந்த முழு ஆடியோ வெளியே வராமல் இருக்க, அந்த நடிகைக்கு பதினைந்து லட்சம் கொடுத்துள்ளாராம். பின்னே என்ன செய்ய முடியும்? திருடனுக்கு தேள் கொட்டியது போல தான் இருந்தாக வேண்டுமே! கோலிவுட் பக்கம் அந்த இயக்குனர் மற்றும் அந்த நடிகையின் இந்த விவகாரம் தான் ஹா ட் டாப்பிக். அப்புறம் அந்த நடிகை யார் என யூகித்தாயிற்றா?