Home ஜல்சா ஓரின சேர்க்கை பெண் மந்திரி இங்கிலாந்தில் பகிரங்கமாக அறிவிப்பு…

ஓரின சேர்க்கை பெண் மந்திரி இங்கிலாந்தில் பகிரங்கமாக அறிவிப்பு…

29

2068269685untitledஇங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் பெண் மந்திரி ஆக இருப்பவர் ஜஸ்டின் கிரீனிங். சர்வதேச வளர்ச்சி துறையில் பதிவி வகித்து வருகிறார். 47 வயதான இவர் ஓரின சேர்க்கையாளர் என தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிப்பதா? வேண்டாமா என்று பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் நீடிக்க வேண்டும் என்பதற்காக இவர் பிரதமர் கேமரூனுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் தான் ஒரு ஓரின சேர்க்கை பெண் என்பதை அவரே டுவிட்டரில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்த வார இறுதியில் ஓரின சேர்க்கையாளர் பேரணி நடைபெறுகிறது.

இது குறித்த அறிவிப்புக்கு இடையே இதை தெரிவித்துள்ளார். நான் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இது ஒரு நல்ல நாள் என்றும் பெருமைப்பட்டுள்ளார்.

அவரது இத்தகவல் இங்கிலாந்து மக்களிடையே பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹாரிபாட்டார் புத்தக ஆசிரியர் ஜே.கே. ரவுலிங் டுவிட்டரில் பெண் மந்திரி ஜஸ்டின் கிரீனிங்குக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.