Home பெண்கள் உடல் கட்டுப்பாடு ஒல்லிப்பிச்சானா நீங்கள் ? இப்படி செய்தால் விரைவில் குண்டாகலாம் !!

ஒல்லிப்பிச்சானா நீங்கள் ? இப்படி செய்தால் விரைவில் குண்டாகலாம் !!

33

சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காது. ஒல்லியாகவே இருப்பார்கள். மிகவும் ஒல்லியாக இருப்பதும் அழகாய் இருக்காது. அளவோடு பூசியபடி இருந்தால் பெண்களுக்கு அழகாய் இருக்கும்.
அதே சமயம் ஆண்கள் தங்கள் ஒல்லியான உடலை குண்டாக்கியே தீர வேண்டும், இல்லையென்றால் கேலிகளுக்கு ஆளாவோம் என்று இதற்காக ஸ்டீராய்டு மற்றும் புரோட்டின் பவுடர்களை சாப்பிடுவார்கள். இது மிகவும் தவறு.

இவற்றால் உறுப்புக்களுக்கு பாதகம் ஏற்படலாம். குறிப்பாக சிறு நீரகம் பாதிக்கப்படும். இயற்கை முறையிலேயே உங்கள் உடலை குண்டாக்கலாம். அதுவும் விரைவிலேயே குண்டாகலாம். எப்படி என இதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடிக்கடி சாப்பிட வேண்டும் :
அடிக்கடி என்றால் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே இருங்கள். இதற்கு அர்த்தம் கடைகளில் விற்கும் சிப்ஸ், பர்கர் போன்ற மசாலா உணவுகள் அல்ல.
உங்கள் கலோரிகளை அதிகப்படுத்தும் விதமாக இருக்கும் நொறுக்குத் தீனிகள் சாப்பிட வேண்டும்.
நட்ஸ், பீ நட் பட்டர், கோகோ பட்டர், , உலர் பழங்கள், அவகாடோ, ஆப்பிள் ஜூஸ் ( உடலை குண்டாக்கும் பழங்கள் ) ஆகியவை குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்ளுங்கள்.
உயர் ரக எண்ணெய் :
சுத்தமான கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்துங்கள். ஒரே வாரத்தில் உடல் குண்டாவதை காண்பீர்கள்.

இந்த என்ணெய்களில் நல்ல கொழுப்பு அமிலங்களே இருப்பதால் உடலுக்கு தீமை தராது. அதே சமயம் உடல் பருமனை தரும்.
உயர் ரக புரத உணவுகள் :
உயர் ரக புரத உணவை தேடி சாப்பிடுங்கள். சாலமன் மீன், முட்டை, பால், சீஸ், வெண்ணெய், பனீர் ஆகியவற்றை வாரம் தவறாமல் உபயோகிக்கவும். இது வேகமாஉ உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கார்போஹைட்ரேட் உணவுகள் :
கார்போஹைட்ரேட் அதிகம் இருக்கும் அதே சமயம் நல்ல நன்மைகளை தரும் உணவுகளை சாப்பிடுங்கள்.
ராகி, பிரவுன் அரிசி, உருளைக் கிழங்கு, பாஸ்தா, ஆகியவை சிறந்த உணவுகள். இவை மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளைப் போல , குளுகோஸ் அளவை உடனுக்குடன் அதிகரிக்கச் செய்யாது.
மாறாக மெதுவாய் ரத்தத்திற்குள் குளுகோஸை வெளிவிடுவதால் குளுகோஸ் அளவு கட்டுக்குள் இருக்கும் .
9 மணிக்கு மேல் சாப்பிடுங்கள் :
இரவுகளில் 9 மணி க்கு மேல் குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுங்கள். இவை உடலை பருமனாகச் செய்யும் என சமீபத்திய ஆய்வு ஒன்று சமர்ப்பித்துள்ளது. ஆகவே சாப்பிடும் நேரமும் உடல் பருமனை தூண்டுகிறது.

ஜிம்மிற்கு செல்லுங்கள் :
எப்படி உடல் எடைக்க ஜிம்மில் பயிற்சிகள் உள்ளதோ அதே போல் உடல் எடை கூட்டவும் பயிற்சிகள் உள்ளது என தெரியுமா?
உடலில் குறிப்பாக கை, இடுப்புகளில் சதை உருவாக சில பயிற்சிகள் காரணமாக இருக்கிறது. அங்கே இருக்கும் ஆலோசகரை கேட்டு தகுந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
தவிர ஜிம்மில் பயிற்சி செய்வதால் அதிக பசி எடுக்கும் போது உயர் ரக புரொட்டின் உணவுகளை சாப்பிடும்போது உடல் பருமன் உண்டாகிறது.